ஸொரின் ஓ.எஸ். (Zorin OS) - தமிழ் IT

Latest

Friday, January 14, 2011

ஸொரின் ஓ.எஸ். (Zorin OS)



விண்ட்டோஸ் இயங்குதளங்களில் (Windows Operating System) வேலை செய்து பலகிய நமக்கு வேறு இயங்குதளங்களுக்கு (OS) மாறுவது என்பது சற்று விருப்பமற்ற ஒரு செயலாகக் காணப்படுகிறது. ஏனென்றால் ஏனைய OS களின் இடைமுகம் (Interface) நமக்குப் பலக்கப்பட்டதாகக் கானப்படாமயாகும். என்றாலும் இப்போது இந்தா பிரச்சினைக்குத் தீர்வு வந்துவிட்டது எனக் கூறலாம். அதற்காக லினக்ஸ் (Linux) இயங்கு தல வரிசையின் புதிய அறிமுகமான ஸொரின் .எஸ். (Zorin OS) முடிவு கண்டுள்ளது.
ஸொரின் .எஸ். (Zorin OS) இல் கானப்படும் லுக் சேஞ்சர் (Look Changer) முறை மூலம் இயங்குதளத்தின் User Interface நமக்கு வேண்டிய விதத்தில் மாற்றிக் கொள்ளலாம். இதில் உள்ள settings தேவையெனில் Windows 7 இய்ங்குதளத்திற்கு ஒத்த வித்தில் மாற்றி அமத்துக்கொள்ளலாம். இல்லாவிடில் Windows XP, Windows 2000 போன்றவற்றின் interface ற்கு சமனான விதத்திலும் மாற்றிக் கொள்ளலாம். அத்தோடொ Apple Computer களில் காணப்படும் Mac OS இன் interface இற்கும் மாற்றிக் கொள்ளலாம். அது மட்டுமல்லாது தேவையெனில் ஜினோம் (GINOME) interface இற்கும் மாற்றிக் கொள்ளலாம்.
ஸொரின் .எஸ். (Zorin OS) இன் மூலமானது Ubuntu இயங்குதளத்தின் Sauce Code இன் அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. என்றாலும் Ubuntu இயங்குதளத்தை விட சிறந்த பன்புகள் இதில் கானப்படுகின்றது. அத்தோடு மாறுபட்ட User Interfae இலும் Ubuntu வை விட சிறந்த குனாதிசயங்கள் கானப்படுகின்றன.
அடிப்படையில் ஸொரின் .எஸ். (Zorin OS) வைரஸ், மெல்வேர் போன்றவற்றிலிருந்து இப்போதைக்கு பாதுகாப்பக உள்ள ஒரு இயங்தளமாகக் கொள்ளலாம். அதைவிட சாதாரன Windows 7 இயங்குதளத்தைவிட நான்கு மடங்கு வேகமாக இயங்கக் கூடியது. வேறுபட்ட 55 மொழிகளில் இது வெளிவருகிறது (தமிழ் மொழி உற்பட). மேலும் இந்த ஸொரின் .எஸ். (Zorin OS) எமக்குத் தேவையான விதத்தில் முற்றிலுமாக மாற்றியமைத்துக்கொள்ள (Fully Customizable) முடியும்.
இவை எல்லாவற்றியும் விட ஒரு இனிய செய்தி என்னவென்றால், Windows இயங்குதளத்தில் பயன்படுத்துகின்ற மென்பொருற்களை (Softwares)யும் இந்த ஸொரின் .எஸ். (Zorin OS) இல் பயன்படுத்த முடியும். இதற்காக வைன் (WINE) எனும் மென்பொருள் ஸொரின் .எஸ். (Zorin OS) உடன் இனைந்து வருகின்றது. இதன் மூலம் Windows இயங்குதளத்திற்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருற்கள் Windows இல் இயங்குவதை விட வேகமாக இதில் இயங்குகின்றன.
இத்தோடு Office பெக்கேஜ் ஆக Open Office தொகுப்பும், Web Browser ஆக Firefox, E-mail மென்பொருளாக இவெலுஷன் (Evolution) உம், Media Player ஆக Rhythm Box உம் இனைந்தே வருகிறது. இவற்றிற்கு மேலதிகமாக இன்னும் ஏராளமான மென்பொருற்கள் கானப்படுவதோடு, இன்ணும் பல Download செய்து கொள்ளவும் வழிசெய்யப்பட்டுள்ளது.
இந்த ஸொரின் .எஸ். (Zorin OS) இதன் இனையத்தளமான www.zorin-os-webs.com இனையத்தளத்திலிருந்து இலவசமாக Download செய்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

Pages