போகிற வருகிற வழியில் Online Virus Scan செய்யலாம்.. - தமிழ் IT

Latest

Wednesday, February 9, 2011

போகிற வருகிற வழியில் Online Virus Scan செய்யலாம்..

எமது கணனியில் நாம் Virus Guard ஒன்று நிறுவியிருக்கலாம், அது ஏற்கன்வே எமது கணனியை பாதுகாப்பாக வைத்திருக்க உதவியிருக்கலாம், அதேவேளை நாம் நிறுவியுள்ள Virus Guard Trial Version ஆகவும் இருக்கலாம். எனவே அதனுடைய இலவச கால எல்லை முடிவடைந்ததும் அது எமது கணனியைப் பாதுகாக்கும் பொறுப்பை கைவிட்டுவிடும். இதற்கு பதிலாக அதனுடைய Full Version ஐ பணம் செலுத்தி வாங்க நேரிடும்.

இவற்றிர்கெள்ளாம் பதிலாக இப்போது பல நிறுவனங்கள் இலவசமாக Online இல் Virus Scan வசதியை வழங்குகின்றன. இவை இருவகையாக நடக்கின்றன.

· ரியல் டைம் ஒன்லைன் ஸ்கேன் (Real time online Scan)

· ஒன்லைன் பைல் ஸ்கேன் (Online File Scan)

ரியல் டைம் ஒன்லைன் ஸ்கேன் (Real time online Scan)

Bitdefender Quick Scan

http://quickscan.bitdefender.com/ல் இந்த சேவையைப் பெற்றுக்கொள்ளலாம். இங்கு நீங்கள் சேவையைப் பெற முன்னர் இத்தளத்தில் வழங்கப்படும் ஒரு Adone ஐ உங்கள் கணனிக்கு பதிவிறக்க நேரிடும். இதன் பின்னர் தளத்தில் கானப்படும் Scan Now எனும் பொத்தானை செடுக வேண்டியதுதான், உங்கள் கணனி Scan ஆக ஆரம்பிக்கும். இங்கு கணனியின் முழு Hard Disk கும் Scan செய்யப்படாது, என்றாலும் முக்கியமாக வைரஸ், ட்ரோஜன் , மில்வேர் மற்றும் தேவையற்ற மென்பொருற்கள் இருக்கின்றனவா என இது கண்டறிந்து அழைக்கும்.

Panda Active Scan

www.pandasecurity.com/activescan/index/ எனும் தளத்தினூடாக இச்சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த பெண்டா ஸ்கேன் செயற்படுவது இன்டர்நெட் எக்ஸ்ப்லோரர் (Internet Explore) அல்லது பயர்பொக்ஸ் (Firfox) உலாவிகளில் (Browser) மாத்திரமாகும். உங்கள் உலாவி Google Chrome எனின் IE Tab Classic எக்ஸ்டென்ஷன் நிறுவப்படல் வேண்டும்.

இதில் Quick Scan மற்றும் Full Scan ஆகிய இரு வகை முறைகளும் கானப்படுகின்றன. இதில் உங்கள் தேவைக்கேற்ப உங்களால் தேர்ந்து Scan செய்துகொள்ள முடியும். இங்கள் Browser Firfo எனில் சிலவேளை ஒரு சிறிய எக்ஸ்டென்ஷன் பைலை பதிவிறக்க நேரிடும். பின்னர் உரிய Scaner ஊடாக தேவையான வைரஸ் டெபினேஷன் அப்டேட் செய்துகொள்ளும். பின்னர் Scan செய்ய ஆரம்பிக்கும்.

மேலே குறிப்பிட்ட இனையத்தளங்களுக்கு மேலதிகமாக டிரென்ட் மைக்ரோ ஹவுஸ்கோல் (http://housecall.trendmicro.com) மற்றும் எப் செக்கியுரிடு ஒன்லைன் ஸ்கேன் (www.f-secure.com/en_EMEA/security/tools/online-scanner) ஆகிய தளங்களூடாகவும் இவ்வகை Scan களை செய்துகொள்ள முடியும்.

ஒன்லைன் பைல் ஸ்கேன் (Online File Scan)

Virus Scan

http://virscan.org/ என்ற இனையத்தளத்தினூடாக இந்த பைல் ஸ்கேன் சேவையைப் பெற முடியும். இதற்காக நீங்கள் பரீட்சிக்க நினைக்கும் 20mb க்கு உற்பட்ட பைலை அப்லோட் செய்ய முடியும், பின்னர் இனையவெளியிலுள்ள் 30 அதி சிறந்த வைரஸ் காப்பு இனையத்தளங்களினூடாக குறித்தகோப்பு Scan செய்யப்படும்.

20 வரையான கோப்புகள் கொம்ப்ரோஸ் செய்யப்பட்ட ஒரு .zip அல்லது .rar பைல் ஒன்றையும் அப்லோட் செய்து Scan செய்துகொள்ள முடியும். இதற்காக் Choose File எனும் ஒப்ஷனின் மூலம் அப்லொட்களை மேற்கொள்ள முடியும். பின்னர் Uplod என்பதை தெரிவு செய்து விட்டல் போது Scan ஆரம்பமாகும்.

Virus Total

www.virustotal.com எனும் தளத்திலும் இச்சேவை கிடைப்பதோடு இதில் உள்ள ஒரு சிறப்பு என்னவெனில், இதனூடாக URL களையும் Scan செய்துகொள்ள முடியும். இங்கு உங்கள் கோப்பு அப்லோட் ஆவதற்கு முன்னர் Server இல் அது பரிசீலிக்கப்படும். இத் தளத்தில் ஓன்லைன் ஸ்கேன் செய்து தருவதோடு உங்கள் கோப்பை (File) SCAN என குறிப்பிட்டு scan@virustotal.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும். இதன் போது உங்கள் கோப்பு பரிசீலிக்கப்பட்டு அதன் முடிவுகள் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.

மேலே கூறப்பட்ட இரண்டு ஒன்லைன் பைல் ஸ்கேனர்களைப் போலவே ஜொடி (http://virusscan.jotti.org/en) தளத்தினூடாகவும் இச்சேவை வழங்கப்படுகிறது.

எச்சரிக்கை :

இனையத்தில் வளம்வரும்போது திடீரென சில Poup விண்டோக்கள் தோன்றி எமது கணனியில் வைரஸ் இருப்பதாகவும் அதை நீக்குவதற்காக ஒரு லின்கில் கிலிக் செய்யும்படியும் வேண்டி நிற்கும், இவை சிலவேலை விளம்பரமொன்றாகவோ அல்லது வைரஸ் ஆகவோ இருக்கலாம். எனவே நாம் அறியாது வரும் இவ்வாறான அறிமுகம்ற்ற செய்திகளுக்கு பதில் கொடுக்காமல் தவிர்ப்பது பாதுகாப்பக இருக்கும்.

No comments:

Post a Comment

Pages