மொழி மாற்றும் கெமரா… - தமிழ் IT

Latest

Thursday, May 5, 2011

மொழி மாற்றும் கெமரா…


பொதுவாக நாம் கெமரா ஒன்றை பாவிப்பது புகைப்படங்களை எடுப்பதற்காவே, என்றாலும் ஒரு கெமராவினால் அதை விடவும் அதிகமான வேளைகள் செய்ய முடியுமாக உள்ளது. அதிலும் இப்பொது பாவனையில் உள்ள ஸ்மார்ட் போன் (Smart Phone) களில் கெமரா தொடர்பான மென்பொருற்கள் மூலம் புதுப் புது வேளைகள் செய்ய முடிகிறது. நாம் இங்கு பார்க்கப்போகும் மென்பொருளும் இவ்வாறான ஒன்றாகும்.
நாட்டுக்கு நாடு பயனிக்கும் போது நாம் முகம் கொடுக்கும் மிக முக்கியமான பிரச்சினை மொழி ஆகும். பெரும்பாலான நாடுகளில் ஆங்கிலம் பாவிக்கப்பட்டாலும் அவ்வாரில்லாத நாடுகளும் உள்ளன. உதாரணமாக பிரான்ஸை எடுத்துக்கொண்டால் அங்கு விளம்பரப் பலகைகள், வீதி சமிக்ஞைகள், அறிவித்தல்கள் என எல்லாமே பிரெஞ்சு மொழியிலேயே காணப்படும். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நமக்கு துனை புரிவது ஒரு மொழிபெயர்ப்பாளர் அல்லது ஒரு அகராதி. ஆனாலும் இவை அனைத்தையும் விட இலகுமான முறையில் மிகவும் வேகமாக மொழியை மாற்றும் ஒரு முறையை இப்போது Apple iPhine உடன் இயங்கும் ஒரு மென்பொருள் வழங்குகிறது.
இந்த அபூர்வமான கெமரா மென்பொருள் Word Lens என அழைக்கப்படுகிறது. Apple iPhine இன் புதிய பதிப்பான Apple iPhine 4, iPhine 3GS அல்லது வீடியோ கெமராவுடன் கூடிய iPod Touch பொன்ற வற்றில் இந்த மென்பொருளை நிறுவ முடியும். இப்போதைக்கு ஆங்கிலம் பிரெஞ்சு ஆகிய மொழிகளிலேயே இந்த மென்பொருள் இயங்குகின்றது, என்றாலும் விரைவில் ஏனைய மொழிகளிளும் எதிர்பார்க்க முடியும்.
இது பயன்படுத்துவது மிகவும் சரளமானது, நீங்கள் செய்ய வேண்டியது இவ்வளவு தான். Word Lens ஐ துவங்கி, மாற்றப்பட வேண்டிய மொழியை தொரிவு செய்து கெமராவை தேவையான இடத்தை நோக்கி பிடிப்பது தான். இப்போது உங்கள் கெமராவில் மாற்று மொழியில் இருக்கும் படமானது தேவையான மொழிக்கு மாற்றப்படு உங்கள் திறையில் தென்படும். 100% சரியாக இயங்காவிடினும் பெரும்பாலும் சரியாகவே இயங்குகின்றது. இப்போதைக்கு 5$ விலையில் இதனைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த மென்பொருளானது விறைவில் வேறு மொழிகளிளும், இன்னும் வசதிகளுடனும், வேறு மொபைல் போன் களுக்கும் ஏற்ற விதத்தில் வெளிவரலாம் என எதிர்பார்க்கிறோம்.

 

No comments:

Post a Comment

Pages