Sixth Sense தொழிநுட்பம்… - தமிழ் IT

Latest

Thursday, June 23, 2011

Sixth Sense தொழிநுட்பம்…

Pranav_Mistry_SixthSense_Projectநீங்கள் Minority Report திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள், அதில் கதாநாயகன் Tom Cruise தனது கரங்களை கற்றில் அங்கும் இங்கும் நகர்த்துவதன் மூலம் கணனியை இயக்குவதை பார்த்திருபீர்கள். அனாலும் அது சாத்தியபடுமா  என்பது அப்போது  கேள்வியாகத்தான் இருந்தது.

என்றாலும் அது இற்றைக்கு சாத்தியமான ஒரு தொழிநுட்பம் என அறியப்பட்டுள்ளது மட்டுமல்லாது, அதனை விட முன்னேறமான சில படிகளையும் தான்டியுள்ளது. இந்த தொழிநுட்பமானது SixthSense தொழிநுட்பம் எனப்படுகிறது. இதன் முன்னோடி இந்தியாவைச் சேர்ந்த கணனிப் பொறியியல் பட்டதாரியும், Massachusetts Institute of Technology (MIT) image5இன் மாணவருமான 30 வயது நிரம்பிய Pranav Mistry எனும் இளைஞர் ஆவார். அதற்காக Pranav Mistry உடன் பயிலும் அவரது இரு நன்பர்களதும், MIT நிறுவனத்தில் இவர்களது பேராசிரியை Pattie Maes இன் அலோசனைகளுடன் இயங்குகின்றனர்.

இந்த SixthSense தொழிநுட்பத்தில் எவ்வித சாதனங்களையும் தொடாமல் , எவ்வித கணனியும் இல்லாமல் எமது விரல்களின் அசைவினைக் கொண்டு, ஒரு கணனி அல்லது அதனோடு தொடர்புள்ள Scannerm Digital Camara போன்ற சாதனங்களால் செய்யக்கூடிய வேளைகளை செய்ய முடிகின்றமை அதிசயமே.

interface_610x468 இங்கு பாரிய எந்த சாதனங்களும் பாவிக்கப்படுவதில்லை. பாவிக்கப்படுவதெல்லாம் பொக்கெட் புரொஜெக்டர் (Pocket Projector), கேமரா (Web Cam) மற்றும் விரல் அசைவுகளை துள்ளியமாக அரிய விரல்களில் சிவப்பு, நீலம், பச்சை, மஞ்சல் நிறத்திலான ஸ்டிக்கர்கள். இவற்றில் குறிப்பிடப்பட்ட சாதனங்கள் கழுத்தில் தொங்க விடும் வகையில் இனைக்கப்பட்டு பொக்கெட்டில் உள்ள Web Enabled Smart Phone ஒன்றுடன் இனைக்கப்பட்டிருக்கும். விரும்பினால் Web Enabled Smart Phone இதற்குப் பதிலாக Laptop ஒன்றையும் பாவிக்க முடியும்.

கழுத்தில் இருக்கும் கெமராவின் மூலம் விரல்களின் அசைவை (User’s Hand Gestures) மற்றும் முன்னால் தெரியும் பொருள் பற்றிய காட்சியின் உதவியுடன் உனரப்படும். Web Enabled Smart Phone இல் நிறுப்பட்டுள்ள algorithms மூலம் விரல்களில் இருக்கும் வண்ண ஸ்டிக்கர்களின் அசைவு கணிக்கப்பட்டு அதற்குறிய செயற்பாடு பதிலாக வழங்கப்படும். அதாவது முன்னால் உள்ள திரை அல்லது சுவரின் மீது புரொஜெக்டர் அதை காட்டிநிற்கும்.SixthSense2

இது இத்தோடு நின்றுவிடாமல் Digital Camera, Scanner கள் மூலம் செய்யும் வேளைகளையும் நமது விரல் அசைவுகளால் செய்ய முடியும். நடைமுறை உலகையும் டிஜிடல் உலகையும் ஒன்றினைக்கும் ஒரு செயற்திட்டமாகவே இதை இதன் முன்னோடி Pranav Mistry குறிப்பிடுகிறார். இத் திட்டத்தில் Smart Phone தவிர ஏனைய சாதனங்களை அமைப்பதற்கு சுமார் 350$ மாத்திரமா செலவாகியுள்ளது. இத்திட்டத்தினை உலகின் பெரும்பாலானவர்களின் கைகளில் விடுவதற்கும், மேலும் மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் இதன் பிரதான அங்கமாகிய விஷேட மென்பொருளை Open Souce மென்பொருளாக நிர்மானித்துள்ளதாகவும் Pranav Mistry கூறுகிறார், இது உன்மையிலேயே வரவேற்கத்தக்க ஒரு செய்தியாக உள்ளது.

இனி என்ன ஆறாவது புலன் நுட்பம் வந்தாச்சு, அப்புரம் ஏழாவதுதான்….

No comments:

Post a Comment

Pages