இன்று உலகில் அதிகலவில் பேசப்படுவோர் பட்டியலில் மிக முக்கியமான ஒருவரே Apple நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜோப்ஸ் (Steve Jobs). கடந்த சில அண்டுகளில் iPhone, iPad என்பவற்றின் மூலம் உலகின் அனைவரினது கவனத்தையும் இந்த Apple நிறுவனம் ஈர்த்தது என்றால் மறுப்பதற்கு எவரும் இல்லை.
ஆம், இப்போதைய தகவல்களின் படி Apple நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜோப்ஸ் (Steve Jobs) தனது பதவியை இராஜனாமா செய்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறது. சுகவீனம் காரனமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப் படுகிறது. சுகவீனம் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
எது எவ்வாராயினும் அதிபர் ஸ்டீவ் ஜோப்ஸ் (Steve Jobs) இராஜினாமா நிறுவனத்திற்கு சில பாதகங்களையும் தரலாம் என அவதானிகள் கூறுகின்றனர். என்றாலும் ஸ்டீவ் ஜோப்ஸ் (Steve Jobs) முழுமையாக நிறுவனத்திலிருந்து ஒதுங்கமாட்டர் என்வும் அறிவிக்கப்படுகிறது. இவரின் இடத்திற்கு Tim Cook என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார், இவரும் Apple நிறுவனத்தின் ஆரம்பமுதல் முக்கிய ஒரு பங்காளி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment