நீங்கள் இறந்த பின் உங்கள் டிஜிடல் சொத்துக்கள்… - தமிழ் IT

Latest

Monday, January 9, 2012

நீங்கள் இறந்த பின் உங்கள் டிஜிடல் சொத்துக்கள்…

இறந்தவர்களின் ஒன்லைன் கணக்குகளை பாதுகாக்கும் புதிய முறை…

290832_300ஒருவர் இறந்ததன் பின்னர் குறித்த நபருக்கு உரிய சொத்துக்கள் நெருங்கிய உறவினர்களுக்கு சொந்தமாகி விடுகின்றன. முன்பு போன்றல்லது இன்று நிலையான சொத்துக்களுடன் டிஜிடல் சொத்துக்களும் காணப்படுகின்றன. ஃபேஸ்புக் கணக்கு, டிவிட்டர் கணக்கு, ஃப்லிகர் போடோ ஷேரிங் கணக்கு தமது இனையத் தளம் என ஏராலமான டிஜிடல் சொத்துக்களை அடுக்கிக்கிச் செல்லலாம்.

ஒரு நபரின் மரணத்தின் பின்னர் இவற்றின் நிலை என்ன? அவற்றை அவ்வாரே விட்டு விடுவதா? அல்லது தொடர்ந்து கொண்டு நடாத்துவதா..?

இது பற்றி சிந்தித்த பிரித்தானியாவின் கேம்பிரிஜ் நகரைச் சேர்ந்த மைக்ரோசொப்ட் இன் ஆய்வு அலுவலரான “ரிச்சட் பேன்க்ஸ்” புதிய ஒரு கருத்தை கூறினார். இறந்த ஒரு நபரின் நினைவுகள் மற்றும் பெருமதி வாய்ந்த செயற்பாடுகள் பின்னால் வரக்கூடிய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பாதுகாக்கும் வழிமுறைகளின் சாத்தியங்களை கண்டறிய அவர் டிஜிட்டல் மெமரீஸ் (Digital Memories) எனும் பெயரில் செயற் திட்டம் (Project) ஒன்றை நிறுவுயுள்ளர்.

இந்த செயல் திட்டம் பல கட்டங்களை கொண்ட ஒன்றாகும். இதில் ஒரு முறை யாதெனில் “டிஜிடல் மெமரி பொக்ஸ்” எனும் ஒரு விசேட டெப்லட் கணினி ஒன்றை உருவாக்கி அதில் தேவையான ஒன்லைன் கணக்கை முழுமையாக பிரதி எடுக்க முடுயுமாக அமப்பதோடு, பின்னர் அதன் மூலம் கணக்குகளின் தகவல்களை பார்க்கவும் முடிகிறது.

Banksஎவ்வாறாயினும் தனது மரணத்தின் பின்னர் டிஜிடல் நினைவுகளை பகிர்வதாயின், தனது பாஸ்வேர்ட் களை உறவினர்களுக்கு வழங்க வேண்டும். என்றாலும் இவ்வாரல்லத சந்தர்ப்பங்களில் மேற்கொள முடியுமான சில நடவடிக்கைகளையும் இந்த Digital Memories திட்டம் முன்வைக்கிறது. அவர்கள் கூறுவதாவது ஒவ்வொறு ஒன்லைன் கணக்கு திறக்கப்படும் போதும் ஒரு உயில் முன்வைக்கப்படல் வேண்டும் என்பதாகும். இதன் மூலம் தனக்கு விருப்பமான நபருக்கு தனது கணக்கின் தகவல்களை வழங்க வழி செய்ய முடியும் என்பது இவர்கள் கூறும் வழிமுறையாகும். கிறித்த நபர் இறந்த பின்னர் உறவினர்கள் மூலம் குறித்த நிறுவனங்களுக்கு அறிவித்து, பின்னர் கணக்கு களின் தகவல்களை உரவினர்கள் பயன்படுத்த முடிவதாகும். இதன் மூலம் இறந்த நபரின் நினைவுகளை மீட்ட வாயோஉ ஏற்படுகிறது.

இவ்வாறு பெறப்படும் தரவுகளை Digital Box களில் சேமிப்பதோடு ஒன்லைன் சேவையொன்றின் மூலமும் பன்படுத்த முடியும். இறந்த நபர்களின் நினைவுகளின் வைப்பிடமாக இந்த இனைய சேவையை நிறுவ இவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதில் நுழைந்து தமது இறந்த இறவின் பெயரை கொடுத்து சேர்ச் செய்வதன் மூலம், அவர் உயிருடன் இருக்கும் போது சேகரித்த டிஜிடல் நினைவுகளை மீட்டமுடிகிறது.

 

இன்னும் என்னவெல்லாம் வருமொ….. I don't know smile

No comments:

Post a Comment

Pages