i Watch – அப்பில் நிறுவனத்தின் கைக்கடிகாரம்.. - தமிழ் IT

Latest

Thursday, March 7, 2013

i Watch – அப்பில் நிறுவனத்தின் கைக்கடிகாரம்..

iWatch2_19 கையில் அனியக்கூடிய விதத்திலான iPhone போன்ற ஒரு உபகரனத்தை Apple நிறுவனம் உற்பத்தி செய்து வருவத்க அன்மையில் தகவல்கள் வெளியாகின. Apple நிறுவனம் உத்தியோகபூர்வமாக எந்த விபரத்தையும் வெளியிடாவிட்டாலும், அமரிக்காவின் New York Times பத்திரிகை இந்த புதிய உபகரனத்தின் பெயர் iWatch என கூறியிருந்தது.

கைக்கடிகாரம் போல் கைகளில் அனியக்கூடிய இந்த iWatch ஆனது iOS இன் மூலம் இயங்கக்கூடியது. சாதாரன iPhone இனை புலூடூத் (Bluetooth) மூலம் இனக்கப்படும். அப்போது மொபைல் பேமன்ட், போகிற வருகிற போது புகைப்படமெடுத்தல் (Navigation) வேலைகள், ஈ-மேல், மெசேஜ், தனது உடல் ஆர்ரோக்கியம் பற்றிய விபரங்களைப் பெறல், இசை, நேரம் பார்த்தல் போன்ற ஏராலமான வேலைகளை இதன் மூலம் செய்ய முடியும். iPhone இல் இருக்கும் வொய்ஸ்களைக் கண்டறியும் சிரி (Siri) நிகழ்ச்சிக்கு வொய்ஸ் கமான்ட் வழங்குவதற்கும் iWatch இனைப் பாவிக்க முடியும்.

இந்த iWatch இல் விலோ கிலாஸ் (Willow Glass) எனப்படும் வளைந்து கொடுக்கக்கூடிய புதிய கண்ணாடி வகை பாவிக்கப்ப பட்டுள்ளது. இதன் மூலம் சற்று கணமான டச் ஸ்கிரீனை உருவாக்கியுள்ளனர். இந்த iWatch இன Touch Screen ஆனது 1.5” அளவுடையது.

அமரிக்காவின் வோல் ஸ்ட்ரீர் ஜேர்னல் (Wall Street Journal) பத்திரிகை இதைப் பற்றி கூறுகையில், iWatch இன் உற்பத்தி சீனாவின் ஃபொக்ஸ்கோன் (Foxconn) நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக கூறியுள்ளது. ஃபொக்ஸ்கோன் (Foxconn) நிறுவனம் உபகரனத்தை Apple நிறுவனத்தின் உற்பத்தி பங்கு நிறுவனமாகும். என்றாலும் ஃபொக்ஸ்கோன் (Foxconn) இதுவரை இந்த விடயம் பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.

iWatch2_10 iWatch மூலம் ஏராலமஆன வேளைகள் செய்யக் கூடியதாக இருந்தாலும், ஒரு முரை சார்ஜ் செய்தால் நீண்ட காலத்துக்கு பாவிக்கக் கூடியதாக இருக்குமாம். இதற்குக் காரணம் முகவும் குறைந்த மின் சக்தியில் இயங்கும் இன்டெல் சிப் இதில் பாவிக்கப் பட்டிருக்கின்றமையாம். அத்தோடு குறைந்த சக்தியில் இயங்கும் புலூடூத் நுட்பமும் இங்கு பாவிக்கப் பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் சந்தைக்கு வரவுள்ள இந்த iWatch இற்காக தற்போது 100 அடங்கிய குழுவொன்று மும்முரமாக இயங்கி வருகின்றது. புலூம்ஸ்பர் (Bloomsber) செய்த்யூடகம் வெளியிட்ட தகவளின் படி; இந்த குழுவை Apple நிறுவனத்தின் பொரியியளாலர் ஜேம்ஸ் ஃபோஸ்டட் வழி நடாத்துகின்றார். என்றாலும் இது பற்று கருத்து வெளியிட Apple நிறுவனம் மறுத்திருந்தனர்.

கையில் அனியக்கூடிய பல உபகரனங்கள் இப்போது iPhone உடன் இனைத்துப் பாவிக்ககக் கூடிய விதத்தில் இருக்கின்றன. இவற்றுள் ஃபுவல் பேன்ட் (Nike’s FuelBand), அப் (Jawbone Up) என்பன முக்கிய இடம் வகிக்கின்றன. Apple நிறுவனம் இந்த iWatch எனும் கையில் அனியும் (Wearable Computer Device) உற்பத்தி செய்வது மேலே சொல்லப்பட்ட சாதனங்கள் இரண்டின் துரிதமாக பிரபல்யம் அடைந்து வருவதனாலாகும்.

இது போன்ற ஒரு ஸ்மார்ட் கைக்கடிகாரமொன்றை உருவாக்க முடியும் என முதலில் காட்டியது மைக்ரோசொப்ட் நிறுவனமாகும். அதற்காக ஸ்பொட் (Spot – Smart Personal Object Technology) தொழிநுட்பத்தை 2003 கென்ஸியூமர் இலக்ரொனிக் ஷோ (CES) கண்காட்சியில் மைக்ரோசொப்ட் முன்வைத்தாலும் அவாறான உபகரமொன்றை அது தயாரிக்கவில்லை.

எது எவ்வாறாயினும், Apple நிறுவனம் கைக் கடிகாரத்தையும் விட்டு வைக்கவில்லை. இன்னும் என்னவெல்லம் செய்வாங்களோ….

No comments:

Post a Comment

Pages