உலகெங்கும் மொபைல் போன் மூலம் கிரடிட் கார்டின் விபரங்களை திருடும் நூதன கும்பல் தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொபைல் போன்களில் தரவேற்றப்பட்ட பிரத்தியேக மென் பொருள் மூலமாக உலகெங்கும் 30 மில்லியனுக்கும் மேலான கிரடிட் காட்டுக்களின் விபரங்கள் இதுவரை திருடப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
குறித்த மென்பொருளை மொபைலில் பதிவதன் மூலம் கிரடிட் கார்ட் வைத்திருப்பவரின் அருகில் சென்று அனைத்து விபரங்களையும் சில செக்கன்களில் எடுத்து விட முடியுமாம்.
பிரித்தானியாவில் 5.4 மில்லியன் பேர் மாதாந்தம் கிரடிட் காட்டை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்கின்றனர்.
இந்த அதிர்ச்சித் தகவலை பிரிட்டனின் பிரபல பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
இப்படியான திருடர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள் வாசகர்களே…
இப்படித்தான் கிரடிட் கார்ட் விபரங்கள் திருடப்படுகின்றன – விவரணப் படம்
No comments:
Post a Comment