மைக்ரோசொப்ட் இயங்குதளங்களிலுள்ள பிரபல்யமான Ctrl + Alt + Delete செயற்பாடு தவறுவதலாக உருவானது என மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனரான பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசொப்ட் இயங்குதளங்களின் கணனியை ஷட் டௌவ்ன் செய்வதற்கும் கணனியின் செயற்பாடுகளை முடக்கும் செயற்பாடுகளுக்கும் பிரதானமாக இந்த Ctrl + Alt + Delete செயற்பாடு பயன்படுகிறது.
இது குறித்து செல்வந்தரான பில்கேட்ஸ் கூறுகையில், 3 விரல்களை பயன்படுத்தி செயற்படுத்தப்படும் செயற்பாட்டினை ஒரு பொத்தானில் வடிவமைக்க இருந்தோம். ஆனால் ஐ.பி.எம். விசைப்பலகையை (கீ போட்) உருவாக்கிய நபர் இந்த ஒரு பொத்தான் விடயத்தினை எங்களுக்காக செய்யவில்லை. எனவே Ctrl + Alt + Delete செயற்பாட்டினை வடிவமைத்தோம் என தெரிவித்துள்ளார்.
இத்தவறு குறித்த தகவலை அண்மையில் ஹாவாட் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற செவ்வி ஒன்றின் போதே பில்கேட்ஸ் வெளியிட்டுள்ளார்..
குறித்த ஐ.பி.எம். விசைப்பலகையினை டேவிட் பிராட்லி என்பவரே உருவாக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment