வாட்ஸ் அப்-ல் உள்ள கூடுதல் வசதி என்ன தெரியுமா? - தமிழ் IT

Latest

Sunday, May 7, 2017

வாட்ஸ் அப்-ல் உள்ள கூடுதல் வசதி என்ன தெரியுமா?

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களில் வாட்ஸ் அப் பயன்படுத்தாதவர்களே இல்லை. நண்பர்கள், உறவினர்கள் போன்ற அனைவரிடமும் தகவல்களை எளிதாக நாம் பகிர்ந்து கொள்வதற்கு நாம் பயன்படுத்துவது வாட்ஸ் அப் தான்.

வாட்ஸ் அப் பயன்படுத்துவோரில் பலருக்கும் அதில் உள்ள அனைத்து வசதிகளையும் பற்றி தெரியாது. வாட்ஸ் அப்-ல் உள்ள முக்கியமான வசதிகள்.

கூடுதல் பாதுகாப்பு

வாட்ஸ் அப் பயன்படுத்துவதற்கு User Name, Password போன்றவை தேவை இல்லை. மொபைல் எண்ணுக்கு வரும் OTP மட்டுமே போதுமானது.

உங்களின் போன் எங்காவது தொலைந்தால் மொபைல் லாக் செய்யப்பட்டு இருந்தாலும் சிம் கார்டு மூலம் உங்களின் வாட்ஸ் அப்-ஐ மற்றவர்கள் உபயோகிக்க இயலும்.

இதனை தடுக்க வாட்ஸ் அப் setting--> Acccounts--> Two step verification என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

WhatsApp Image 2017-05-07 at 2.30.30 PM (1)WhatsApp Image 2017-05-07 at 2.30.30 PM (2)WhatsApp Image 2017-05-07 at 2.30.30 PM

அதில் Mail id, password ஆகியவற்றை அளிப்பதன் மூலம் வேறு யாராவது வாட்ஸ் அப் ரீஇன்ஸ்டால் செய்தால் அதற்கு password கட்டாயம் தேவை.

ஒரு வேளை password மறந்துவிட்டால் Mail id மூலமாக மீண்டும் மாற்றி கொள்ளலாம்.

இயர்போன் தேவையில்லை

வாட்ஸ் அப்-ல் குறுஞ்செய்திகளை போன்றே ஒலிப்பதிவு செய்யப்பட்ட செய்திகளும் அனுப்பப்படுகின்றது. அதனை கேட்பதற்கு இயர் போன் தேவையில்லை.

ஒலிப்பதிவை Play செய்து காதின் அருகே வைத்தாலே போதுமானது Speaker Mode-ல் இருந்து Ear mode-க்கு மாறிவிடும்.

பின் செய்யும் வசதி

எமது Chat  லிஸ்டில் எமக்குத் தேவையான நபரை, அல்லது Group ஐ லிஸ்டில் முதலிலேயே காட்டுவதற்காக பின் செய்வதை இது குறிக்கிறது.

WhatsApp Image 2017-05-08 at 5.29.29 AM

தேவையான Chat / Contact ஐ Select செய்து, பின்னர் மேலே காட்டும் Pin என்பதை தெரிவு செய்தால் போதுமானது. தேவையில்லை என கருதினால் மீண்டும் Select செய்து Unpin செய்ய வேண்டியது தான்.

வாட்ஸ் அப் குரூப்-ல் உள்ள வசதிகள்

இந்த வசதிகள் ஏற்கனவே தெரிந்தவைதான். என்றாலும் நினைவூட்டலுக்காக.

அலுவலக நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் உள்ள குரூப்ப்பில் அதிகமாக செய்திகள் வந்து கொண்டே இருக்கும். அதில் குறிப்பிட்ட முக்கியமான செய்தியை மட்டும் புக் மார்க் செய்து கொண்டால் படிப்பது சுலபம்.

குரூப்-ல் உள்ள ஒருவருக்கு மட்டும் மேசேஜ் செய்ய விரும்பினால் @ போட்டு அவரின் பெயரை குறிப்பிட்டால் போதுமானதாகும்.

WhatsApp Image 2017-05-08 at 5.30.32 AM

 

ஒரு செய்திக்கு மட்டும் பதில் அளிக்க விரும்பினால் அதனை Long press செய்து Reply என்பதை தேர்ந்தெடுத்து பதிலளிக்கலாம்.

எழுத்துக்களின் வடிவம் மாற்றும் வசதி

வாட்ஸ் அப்-ல் செய்தியினை அனுப்பும் போது அதன் தொடக்கத்திலும் இறுதியிலும் இடைவெளியின்றி ’*’ என குறிப்பிட்டால் எழுத்துக்கள் Bold ஆக மாறும். ‘_’ எனக் குறிப்பிட்டால் Italic வடிவம் பெறலாம்.

வாக்கியத்தின் குறுக்கேஎ கோடு கிழிக்க(Strike through) விரும்பினால் ’~’ என டைப் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

Pages