முகமூடி அனிந்த இனையத்தளங்கள். - தமிழ் IT

Latest

Tuesday, June 14, 2011

முகமூடி அனிந்த இனையத்தளங்கள்.

பிரபலமான முன்னோடி நிறுவனமொன்றின் உத்தியோக பூர்வ இனையத்தளத்திற்கு குறிப்பிட்ட ஒரு உத்தியோகசார் வடிவம் (Professional Interface) கொடுக்கும் விஷெட வடிவமைப்புகள் கானப்படும், அது அடிக்கடி வருகை தரும் பாவனையாளர்களுக்கு பலக்கப்பட்ட ஒன்றாகவும் இருக்கும். இவ்வாறான இனையத்தளங்களில் பாவனையாளர்கள் தங்கள்து தனிப்பட்ட தரவுகள், வங்கிக்கணக்கு விபரங்களைக் கொடுப்பதில் பின்வாங்க மாட்டார்கள். என்றாலும் இவாறு தகவல்களைத் திரட்டும் போலி இனையத்தளங்கள் உண்மையான இனையத்தளங்களின் வடிவிலேயே இருப்பதை பெரும்பாலானோர் கவனிப்பதில்லை என்பதோடு இவ்வாறான போலித் தளங்கள் (Fake Web Sites) ஏராலமான மோசடி நடவடிக்கைகளின் மூலம் பலரை இன்றைக்கும் ஏமாற்றிக்கொன்டிருக்கின்றன.

paypal சட்டவிரோத இனையத்தளங்கள் பற்றிய ஆய்வொன்றை மேற்கொண்ட பென்டா லெப் (Panda Lab) நிறுவனம் கூறியதாவது, தினம் தோறும் இவ்வாறான போலி இனையத்தளங்கள் சுமார் 57,000 இனைக்கப்படுவதாகவும், ஒரு வருடத்திற்கு இது 3,100,000 ஐ அன்மிக்கின்றனவாம்.

visa_paywave இவற்றுள் பெரும்பாலானவை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பெயரிலான போலி இனையத்தளங்களாகும். வீசா (Visa) நிறுவனம், எமசோன் (Amazon) நிறுவனம், பேய் பள் (Pay Pal) ஆகிய நிதிக் கொடுக்கல் வாங்கள்களுடன் தொடர்புடைய இந் நிறுவனகளின் உத்தியோக பூர்வ இனையத்தளங்களுக்கு ஒப்பானான் போலித் தளங்களே அதிகளவில் கானப்படுகின்றன. இனைய வெளியில் இருக்கும் போலி இனையத்தளங்களுள் 65% மானவை இவற்றின் போலுகளாகும்.

வங்கிக் கணக்கு மற்றும் கிரெடிட் அட்டைகளின் தரவுகளை இவ்வாறான தளங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் மொசடிக்காரர்கள் அவற்றின் மூலம் அடுத்தவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து திருட்டுத்தணமாக பணத்தைத் திருடுகின்றனர்.

இனையமூலம் கொடுக்கல் வாங்கல் செய்யும் பலர் போலித்தளங்களின் மூலம் கொள்வனவுகளை மேற்கொள்கின்றனர். சிலருக்கு அவை கிடைப்பதே இல்லை, அல்லது உன்மையான பொருளுக்குப் பதிலாக போலிப் பொருற்களே வந்து சேர்கின்றன.

இனையமூலம் பல்வேறு பொருற்களையும் ஏலம் விடுகின்ற ஈபே (eBay) இனையத்தளத்திற்கு ஒப்பான போலிகள் இனைய வெளியில் அளவின்றி இருப்பதாக பென்டா லெப் (Panda Lab) நிறுவனம் கூறுகிறது. இவ்வாறன ஈபே (eBay) இனையத்தளத்திற்கு ஒப்பான போலிகள் இனையத்தளங்கள் மத்திரம் 23% உள்ளனவாம்.

வாடிக்கையாளர்களை ஏமாற்றிப் பணம் பரிக்கும் இவ்வாறான மோசடிக்கரர்களைக் கட்டுப்படுத்த பிரபல நிறுவனங்களும், உலாவி (Browser) நிறுவனங்களும் இன்னோரன்ன முயற்சிகளை நாளாந்தம் செய்கின்றன, என்றாலும் மோசடிக்காரர்கள் இவற்றை எல்லாம் தான்டி தங்களது வேளைகளை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றனர். இதற்கு இனைய வெளியில் பல்வேற்ய் சேவைகள் துனை போகின்றன.

fcs_logoஇலவச வெப் டெம்ப்லட் (Web Templet) மற்றும் இலவச ஹொஸ்டிங் (Free Web Hosting) வழங்கும் இனையத்தளங்கள் மூலாம் போலித் தளங்கள் உருவாக பெரிதும் துனை நிற்கின்றன. இவை தொடர்பாக கருத்துக் கூறும் பிரித்தானியாவின் ஃபெஸ்ட் சைபர் செக்கியூரிட்டி (First Cyber Security) நிறுவனம், இன்றைய இனையத்தில் இருக்கும் சேவைகள் மூலம் ஒரு சில நிமிடங்களில் இனையத்தளமொன்று நிறுவப்பட்டு Host செய்ய முடிவதோடு,  அமைக்கப்படும் இவ்வகைத் தளங்கள் கண்டறியப்படும் போது அதற்கான இன்னொரு மாற்று வழியை இந்த மோசடிக்காரர்கள் மேற்கொள்கின்றனராம். இது தடுக்கப்பட முடியாத ஒரு சவாலாகக் கானப்படுகிறது.

எது எவ்வாறாயினும் இனையத்தளங்களூடாக கொடுக்கல் வாங்கள் செய்யும் போது சற்று கவனமாக இருப்பது நமக்கே சிறந்தது…

1 comment:

Pages