இன்றைய உலகில் iPhone எனும் பெயரை உச்சரிக்காதவர்களே இல்லை எனும் அளவுக்கு இந்த iPhone மக்கள் மனதில் இடம் பிடித்ததுள்ளது என்றால் மறுப்பவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். என்றாலும் இந்த iPhone இல் நாம் அறியாத பல இரகசியங்கள் இருக்கின்றன என்பதை இவர்கள் எல்லோரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு iPhoneஇல் பதிவாகும் தரவுகள் Apple நிறுவனத்தினால் பெறப்படுகிண்றன என்பதற்கான தகவல்கள் கிடைக்காவிட்டாலும், இது Apple நிறுவனத்தினால் மறைக்கப்பட்ட ஒரு தகவல்கக் கருதப்படுகிறது. அதுமட்டுமல்லாது, இது தனி நபர் சுதந்திரம் (Privecy) தொடர்பான சவாலக இருப்பதாக பொதுவான கருத்து நிலவுகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்தின் கடைசியில் கசிந்த இந்த செய்தியின் ஒரு வாரத்தின் பின்னர் Apple நிறுவனத்தினால் இதற்கும் பதில் வழங்கப்பட்டது. இவ்வாறு தகவள் பதிவாகும் இரகசிய மென்பொருள் இருப்பதை அது ஒப்புக்கொண்டது. அவ்வாறு ஒன்றை செய்ததற்கான காரணமொன்றையும் அது கூறியது. அதில் பிரதானமாக, iPhone பாவனை நியதிகளின் (Terms of Use) அடிப்படையில் ஏற்கனவே இவாறான தகவல் சேகரிப்பு தொடர்பாக கூறப்பட்டிருக்கின்றமையாகும். பொதுவாக இவ்வாறு தரவு சேமிக்கப்படுவது செல்யூலர் Towerகள் பற்றியும் Wi-Fi தளங்கள் பற்றியுமாகும். iPhone இல் காட்டப்படுவது Towerகள் இருக்கும் இடத்த்யே அன்றி குறித்த நபர் இருக்கும் இடத்தை அல்ல என Apple நிறுவனம் விளக்கியது. அத்தோடு இத்தகவல்கள் எவ்வித தரவுக் கோப்பு (Database) ஆகவும் சேமிக்கப் படுவதில்லை என்று Apple நிறுவனம் கூறுகிறது.
என்றாலும் iPhone களில் தற்காலிகமாக மட்டும் பதிவாகும் இத் தகவல்கள் ஏன் சில iPhone களில் பல ஆண்டுகள் சேகரிக்கப்பட்ட தரவுகள் அழியாமல் இருந்தது வினவப் பட்டதற்கு, அது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு செயலன்று, அது மென்பொருளில் ஏற்பட்ட ஒரு தவறு (bug) என அது பதில் வழங்கியது.
இத்தோடு இன்னும் சில நிறுவனங்களின் இவ்வாறான நடவடிக்களும் கசிந்துள்ளன, அதாவது, வெரிஸோன் (Verizone) நிறுவனம் பாவனையாளர்களின் இருப்பிடம் தொடர்பான தரவுகளை கடந்த ஏழு வருடங்களாக பேனி வருவதாகவும், ஸ்ப்ரின்ட் (Sprint) நிறுவனம் 3 வருடங்களுக்கும், ஏடீ அன்ட் டீ (AT&T) நிறுவனம் இதனை 50 வருடங்களுக்குப் பேனும் திட்டத்தையும் கொண்டுள்ளதாம். என்றாலும் பாவனைய்யாளர்கள் இது தொடர்பாக கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் இத்தரவுகள் நிறுவனத்தால் இரகசியமாகவே பேனப்படுகின்றது. என்றாலும் iPhoneஇன் நிலைவேறு, இதன் தரவுகள் நிறுவனத்திலன்றி அதே Phoneஇலேயே பதிவாகிறது. இதனை வேண்டிய நபர்களினால் கையாளக் கூடியாயதாக இருக்கின்றமை பாதிபான விடயமாகும்.
No comments:
Post a Comment