இன்றைய கணனிகளில் வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பது Pen Driveகள் அல்லது USB சாதனங்கள் என்றால் மிகையாகாது. என்றாலும் USB சாதானங்களின் பயன்பாடானது இன்று தவிர்க்க முடியாததாகும். எனவே நாம் எமது கணனிகளில் USB சாதனங்களை மிக அவதானமாக பாவிக்க வேண்டியுள்ளது.
இதற்காக இன்று ஏராளமான நுட்பங்கள் கையாளப்பட்டாளும் அவை சாதாரன கணனிப் பாவனையாளர்களால் இலகுவாகக் கையாள் முடியாதிருப்பது நாமறிந்ததே…
என்றாலும் இதற்கு சிறந்த மாற்றீடொன்று இல்லாமலில்லை. அதாவது இதற்காக ஒரு நிறந்த மென்பொறுள் இருக்கின்றது. அது தான் USB Disc Security மென்பொருள்.
இந்த USB Disc Security மென்பொருள் உங்கள் கணனியில் நிறுவப்பட்டிருந்தால், ஏதாவது ஒரு USB சாதனம் கணனியோடி இனைக்கப்பட்டவுடன் அது தானாக அதணை Scan செய்து தேவையற்ற பாதுகாப்பற்ற File களை உடனடியாக தடுத்து நிறுத்தும். அத்தோடு உங்கள் Pen Driveஐ கணனிக்குப் பாதிப்புகள் வராத வகையில் “Safe Open” செய்யும் ஒரு முறையும் இதில் இருக்கின்றது. அதேவேளை தேவைப்படின் எந்தவொரு USB சாதனத்தையும் கணனிக்கு இனைக்க விடாமல் தடுக்கும் இரு முறையையும் இது உள்ளடக்கியுள்ளது.
வெளி நபர்கள் உங்கள் கணனியில் இருக்கும் File களை Pen Drive களில் எடுத்துச் செல்வதையும் உங்களால் தடுக்க முடியும். அதாவது இந்த மென்பொருளில் உள்ள USB Access Control என்பதை Password ஒன்றின் மூலம் Lock செய்து வைத்தால், கணனியில் உள்ள Dataகளை எவராளும் காவிச்செல்ல முடியாது போகும். இவை தவிர இன்னும் பல வசதிகளும் இதில் இனைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment