புதிய வசதிகளுடன் Skype (Beta) 5.5 - தமிழ் IT

Latest

Saturday, June 25, 2011

புதிய வசதிகளுடன் Skype (Beta) 5.5

skype_facebook_logo Online Call என்றவுடன் யாருக்கும் நினிவில் வருவது Skype என்றால் பிழையில்லை எனலாம். ஏனென்றால் இன்று இந்த Skype ஐ அறியாத எவரும் இருக்க முடியாது, சிறு பிள்ளைகள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி தமது உறவுகளுடனும், நன்பர்களுடனும் அடிக்கடி பேசிக்கொள்ள ஒரு சிறந்த வழியாகவே Skype கருதப்படுகிறது. இதைவிட கணனி அறிவே இல்லாத பலரும் இந்த Skype பற்றி அறிந்துவைத்துள்ளனர் என்றால் சொல்லவும் வேண்டுமா..?skype2

காலத்துக்குக் காலம் புதிய வசதிகளுடன் வரும் இந்த Skype மென்பொருள் அன்மையில் அதன் புதிய Beta பதிப்பை வெளியிட்டது, அதாவது Skype (Beta) 5.5. இதில் பல வசதிகள் இனைக்கப்பட்டுள்ளன, அவற்றுல் Wi-Fi Access எனும் புதிய வசதி இனைக்கப்பட்டுள்ளதோடு, Facebook நன்பர்களுக்கு ஒரு இனிய செய்தியும் இருக்கிறது. இதுவரை Skype இல் Facebook ஒரு புரம்பான ஒரு பகுதியாகவே இனைக்கப்பட்டிருந்தது. அனால் இந்த புதிய பதிப்பில் உங்கள் Facebook நன்பர்களோடு Facebook தளத்திற்கு செல்லாமலே Chat செய்ய முடியும். அதாவது, உங்கள் Facebook கணக்கை Skype உடன் இனத்ததும் உங்கள் Facebook Contact அனைத்தும் Skype Contact List இற்கு அடுத்ததாக உள்ள புதிய Facebook Tab இல் காட்டப்படும்.

இனி என்ன Skype இருக்கும் போதே உங்கள் நன்பர்களுடன் Chat செய்யவும் முடியும்,  இதை விட இன்னும் பல வசதிகளை விரைவில் Skype இல் எதிர் பார்க்கலாம்…..

No comments:

Post a Comment

Pages