இனையத்தில் இன்று ஏராலமான இனையத்தளங்கள் காணப்படுகின்றன, பெரும்பாலானவை பெரிடவர்களுக்காக வடிவமைக்கப்பட்டவை ஆகும். என்றாலும் சிறுவர்களுக்கு இனையத்தின் மூலம் பெறக்கூடிய ஏராலமான சேவகளும் இல்லாமல் இல்லை. என்றபோதிலும் அவற்றை பிரித்தறிவது சிறுவர்களைப் பொருத்தவரியில் சிறமமே. பெற்றாரும் சிறுவர்களை சுதந்திரமாக இனையத்தில் உலாவ விட மாட்டார்கள். இந்த சிக்களை தீர்க்க இப்போது பயர்பாக்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது. அதாவது, “கிட்சூ” (KidZui) எனும் புதிய சிறுவர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட இனைய உலாவி மூலம் இக்குறை தீர்க்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக www.kidzui.com இனையத்தளத்திலிருந்து தரவிரக்கிக்கொள்ளலாம்.
“கிட்சூ” (KidZui) இனை கணனியில் நிறுவிய பின்னர் சிறார்களை சுதந்திரமாக இனையத்தில் உலாவ விடலாம். இந்த உலாவி (Browser) ஏனைய உலாவிகளைப்போல இனையத்திலுள்ள அனைத்துத் தளங்களுக்கும் செல்ல இடமளிக்காது. இதன் மூலம் சிறுவர்களுக்கு உகந்தது என தெரிவு செய்யப்பட்ட சுமார் எட்டு இலட்சம் (800,000) தளங்களுக்கே செல்ல முடியும். இந்த பட்டியல் நாள்தோறும் நீன்டுகொண்டே செல்கிறது.
இந்த “கிட்சூ” (KidZui) உலாவி மூலம் செல்ல அனுமதிக்கும் இனையத்தளங்கள் தெரிவு செய்யப்படுவது பெற்றோரினதும், ஆசிரியர்களினதும் மற்றும் சமூக தொண்டு அமைப்புகளினது உதவியுடனாகும், அத்தோடு அவை “கிட்சூ” (KidZui) குழுவினரால் தனிப்பட்டமுறையிலும் சோதிக்கப்படுகின்றன. இதனால் இத்தளங்கள் 3 முதல் 12 வயது வரையான சிறுவர்களுக்கு பொருத்தமானது என உத்தரவாதம் வழங்கப்படுகின்றது.
அடிக்கடி “கிட்சூ” (KidZui) பாவிக்கும் சிறுவர்களை “சுய்ஸ்” (Zuis) என பெயர் கொண்டு ஒரு வேச்சுவல் கதாபாத்திரமாக மாறி ஏனைய “கிட்சூ” (KidZui) பாவிக்கும் சிறுவர்களுடன் தகவல்களை பரிமாரிக் கொள்ளவும் முடியும். “சுய்ஸ்” (Zuis) மூலம் கருத்துப்பரிமற்றம் செய்யும் போது இன்னொரு “சுய்ஸ்” (Zuis) பாவுக்கும் சிறுவருடன் மாத்திரமே தொடர்பு கொள்ள முடியும். இதனால் அறிமுகமற்ற புதிய நபர்களுடன் தொடர்புகள் ஏற்படாது.
சிறுவர்களால் சுயமாக இந்த “கிட்சூ” (KidZui) தரவிரக்கி கணனியில் நிறுவ முடியாது. மாறாக பெற்ரோர் அல்லது யாரவது பாதுகாவலர் அதனை டவுன்லோட் செய்து கொடுக்க வேண்டும். அதன் போது பெரியவரின் தகவல்கள் “கிட்சூ” (KidZui) இற்கு வழங்க்ப்பட வேண்டும். இதன் மூலம் “கிட்சூ” (KidZui) ப்பவிக்கு சிறுவர் இனையம் மூலம் பெற்றுக்கொண்ட தகவகல்கள் சேவைகள் தொடர்பான தரவுகள் பெரியொருக்கு வழங்கப்படும்.
No comments:
Post a Comment