சென்ற ஆகஸ்ட் 4 அன்று, கூகுள் அனைவரும் விரும்பும் ஒரு சிறப்பான வசதியைத் தன் ஜிமெயில் தளத்தில் தந்துள்ளது. பொதுவாக, நமக்கு வந்துள்ள மெயில்களைப் பார்க்கையில், அனுப்பிய வர் பெயர், நாள் மற்றும் நேரம், மெயிலின் தொடக்க சொற்கள் காட்டப்படும். இதனால், நாம் உடனே பார்க்க விரும்பும் மெயில்களுக்கு முன்னுரிமை கொடுத்து, கிளிக் செய்து பார்க்கலாம். இதனால் இன் பாக்ஸில் ஒவ்வொரு மெயிலாகக் கிளிக் செய்து அலைய வேண்டியதில்லை. அஞ்சலைத் திறக்காமலேயே, அதனைப் பார்க்கும் சந்தர்ப்பத்தினை இந்த புதிய வசதி தருகிறது.
மைக்ரோசாப்ட் அவுட்லுக் மற்றும் வெப் இமெயில் கிளையண்ட் புரோகிராம் களான யாஹூ மற்றும் ஹாட் மெயில் ஆகியவை, மெயில் தளத்தில் மூன்று பிரிவுகளைக் காட்டுகின்றன. இடதுபுற பிரிவில் போல்டர்கள், மின்னஞ்சல் செய்திகள் நடுவில் மற்றும் அஞ்சல் களைப் படித்துப் பார்க்க வலது ஓரத்தில் ஒரு பிரிவு எனக் கொண்டுள்ளன. இந்த மூன்றாவது பிரிவினை, நீங்கள் விரும்பினால், செய்திகளுக்குக் கீழாகவும் வைத்துக் கொள்ளலாம்.
இந்த வாசிக்கும் பிரிவு (reading pane) நமக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாகும். இதன் மூலம் வெகு வேகமாக, நமக்கு வந்துள்ள அஞ்சல் செய்திகளை, அவற்றைத் திறக்காமலேயே பார்த்து, நேரத்தை மிச்சப்படுத்தலாம்.
இதனை ஜிமெயில் இப்போதுதான் சேர்த்துள்ளது. இதனை இயக்க, ஜிமெயில் அக்கவுண்ட் திறந்து, ஜிமெயில் லேப்ஸ் செல்லவும். அங்குள்ள சர்ச் கட்டத்தில் Preview Pane என டைப் செய்தால், உங்களுக்குத் திரையில் அந்தப் பிரிவு காட்டப்படும். இதனை முதலில் Enable செய்திட வேண்டும். பின்னர், இது எந்த பக்கத்தில், இடது/வலது, இருக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். அல்லது இன்பாக்ஸுக்குக் கீழாகக் கூட இருக்கும்படி செட் செய்திடலாம். இத்துடன், ஒரு மின்னஞ்சல் செய்தியினை அதிக பட்சம் எத்தனை விநாடிகள் பார்க்க விருப்பம் என்பதனையும் செட் செய்திடலாம். மாறா நிலையில் இது மூன்று விநாடிகள் தரப்பட்டுள்ளது.
இவ்வாறு செட் செய்து, ஜிமெயில் இன்பாக்ஸ் சென்றவுடன் முன் தோற்றப் பிரிவு காட்டப்படும் என எண்ண வேண்டாம். ஏற்கனவே உள்ள பிரிவுகள் மறைக்கப்பட்டுவிடுமே என அஞ்ச வேண்டாம். நீங்கள் விரும்பினால் மட்டுமே காட்டப்படும். இன்பாக்ஸ் வலது மேல் மூலையில், ஒரு பட்டன் காட்டப்படுகிறது. இதில் கிளிக் செய்தால், பல விருப்பங்கள் காட்டப்படுகின்றன. வழக்கமான லே அவுட் அல்லது இந்த முன் தோற்றலே அவுட் இவற்றில் எதனை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம். வழக்கமான லே அவுட்டைத் தேர்ந்தெடுத்தால், பழையபடி தோற்றம் நமக்குக் கிடைக்கும்.
திரைக்குக் குறுக்காக அல்லது நெட்டுத் தோற்றம் என எந்த வகையில் இது காட்டப்பட வேண்டும் என்பதனைத் தேர்வு செய்து, கிளிக் செய்து அமைக்கலாம். பிரிவின் அகலத்தையும் விரித்து, குறைத்து அமைக்கலாம்.
பிரிவு ஏற்படுத்தப்பட்டுப் பார்த்த பின்னர், இதே பட்டனை அழுத்தி, No Split என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்தால், இந்த பிரிவு மறைந்திடும். இந்த முன் தோற்றக் காட்சி இதுவரை ஜிமெயிலில் இல்லாத ஒன்றை இப்போது தந்துள்ளது.
நன்றி : கம்ப்யூட்டர் மலர்
No comments:
Post a Comment