செல்போன் : மூலைக்குப் பாதிப்பில்லையாம்… - தமிழ் IT

Latest

Thursday, September 8, 2011

செல்போன் : மூலைக்குப் பாதிப்பில்லையாம்…

506256-the-who-has-been-studying-the-link-between-mobile-phones-and-cancerதொடர்ந்து கையடக்கத் தொலைபேசி பாவிப்பதால் மூலையில் புற்றுநோய் அல்லது கட்டி  ஏற்பட வாய்ப்பு உண்டு என்பது நீண்டகாலமாக நிலவி வரும் கருத்தாகும். மூலைக் கட்டி எனப்படும் டியூமர் (Tumors) ஏற்படுவதற்கும் கையடக்கத் தொலைபேசிப் பாவனைக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என டென்மார்க்கின் வென்டபில்ட் பல்கலைக் கழகத்தின் வைத்திய பேராசிரியர் ஜொன் பொய்ன் உள்ளிட்ட குழுவினர் கூறியுள்ளனர். எமரிகன் ஜெர்னல் எபிடெமியொலொஜி (American journal of Epidemiology) வைத்திய சஞ்சிகையின் ஜூலை மாத இதலில் இது தொடர்பான கருத்து வெளியிடப்பட்டிருந்தது.

15 ஆண்டுகளுக்கு மேலாக கையடக்கத் தொலைபேசி பாவனையில் ஈடுபட்ட 28 இலட்சம் பேர் இதற்கான ஆய்வில் சோதிக்கப்பட்டனர். இவர்கள் மத்தியில் டியூமர் (Tumors) ஏற்பட்டுள்ள ஆட்கள் வேறு பிரிக்கப்பட்டனர்.

cell-phone-cancer-linkஇதன் போது கண்டறியப்பட்டதாவது, கையடக்கத் தொலைபேசி பாவிப்போரில் டியூமர் (Tumors) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறு சாதாரணமாக டியூமர் (Tumors) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறை விடவும் குறைவானது என கூறியுள்ளனர். இதன் படி இவர்கள் இறுதியாக கையடக்கத் தொலைபேசிப் பாவனையாள் டியூமர் (Tumors) ஏற்படாது என முடிவு செய்துள்ளனர்.

இங்கு டியூமர் (Tumors) என குரிப்பிடுவது எகொஸ்டிக் நியூரோமா (Acoustic neuromas\Vestibular Schonnoma) எனப்படும் டியூமர் (Tumors) வகையாகும். காதின் நடுப்பகுதியில் இருந்து மூலையினை இனைக்கும் நரம்புடன் சேர்ந்து இந்த டியூமர் (Tumors) ஏற்படுகின்றது. இது ஒரு புற்று நோய் அல்ல. இந்த டியூமர் (Tumors) பெரிதாகும் போது தலைசுற்று, காதில் ஒருவகை ஓசை, உடல் சமநிலை பாதிக்கப்படல் போன்ற அறிகுரிகள் தோன்றும். இந்த எகொஸ்டிக் நியூரோமா எனும் டியூமர் (Tumors) பெரிதாகும் போது மூலையின் மூலம் கட்டுப்படுத்தப்படும் ஒவ்வொரு அவயவமாக செயலிழக்கும். 

கையடக்கத் தொலைபேசி பாவணையின் போது வெளியாகும் கதிர்கள் மூலம் இந்த டியூமர் (Tumors) ஏற்படுவதாக நீண்ட காலமாக கருத்து நிலவி வந்தது. என்றாலுன் சரியாக அது நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை. எது எவ்வாறாயினும் இபோது நம்ம செல்போன்கள் அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுதலையாகி விட்டன.

cell-phone-radiation-cancer

என்றாலும் கைத்தொலைபேசி அதிகமாகப் பாவிப்பதால் எவ்விதப் பாதிப்பும் இல்லை என்ற முடிவை எடுக்க முடியாது. ஏனெனில், கடந்த மே மாதம் உலக சுகாதாரத் தாபனத்தால் (WHO) நடாத்தப்பட்ட பரிசோதனையொன்ரின் போது வழங்கப்பட்ட முடிவானது, கையடக்கத் தொலைபேசியானது புற்று நோய் ஏற்படுத்தக்கூடிய ஒரு சாதனம் என்றாகும்.அதே போல கடந்தத பெப்ரவரி மாதம் அமேரிக்காவின் வைத்திய சங்கமான Journal of American Medical Association) வெளியிட்ட ஆய்வரிக்கையின் அடிப்படையில், கையடக்கத் தொலைபேசி பாவனையின் போது மனித மூலையானது அசாதாரனமான முறையில் இயங்குவதைக் காட்டியதாக தெரிவிக்காப்பட்டது. புற்று நோய் செல்கல் இயங்கும்போது மூலையின் “குளுகோசு” மட்டம் உயர்வடைவதைப் போல கையடக்கத் தொலைபேசி பாவனையின் போதும் மூலையின் “குளுகோசு” மட்டம் உயர்வடைவதாகக் கூறப்படுகிறது.

ஹம்… டியூமர் (Tumors) இலிருந்து தப்பினாலும் கென்ஸரில் (cancer) இருந்து தப்பைக்க முடியது போலும்…

No comments:

Post a Comment

Pages