காலத்துக்குக் காலம் புதுமைகளையும், வித்தியாசங்களையும் தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கு முன்னணி இணைய நிறுவனங்கள் என்றால் யாருக்கும் முதலில் நினைவில் வருவது Google என்றால் பிழை இல்லை என நினைக்கிறேன்…
இந்த கூகில் (Google) சிறிது காலத்துக்கு முன் தனது G-mail பாவனையாளர்களுக்கு வழங்கியிருந்து புதிய சேவை தான் G-mail SMS சேவையாகும். என்றாலும் இதன் மூலம் SMS அனிப்பும் வசதி அனைத்து நாடுகளுக்கும் ஆரம்பத்தில் இருக்கவில்லை. இதில் இலங்கைக்கும் இச்சேவை வழங்கப்பட்டிருக்கவில்லை. என்றாலும் இலங்கையிளுள்ள G-mail பாவனையாலர்களுக்கு SMS வசதியுள்ள நாடுகளுக்கு SMS அனுப்ப முடியுமாயிருந்தது. இலங்கையின் உள்நாட்டு தொலைபேசி சேவைகளுக்கு SMS அனுப்ப முடியாது.
ஆனால் இப்போது அந்தத் தடையும் நீங்கிவிட்டது. இலங்கையின் முன்னணி கையடக்கத் தொலைபேசி வலைப்பின்னல்களான Mobitel, Dialog ஆகிய சேவைகளுக்கு இனி G-mail Chat மூலம் SMS அனுப்ப முடிவதோடு, SMS மூலமே Online இல் இருக்கும் G-mail பாவனையாளரோடு Chat செய்ய முடியும்.
நீங்கள் செய்ய வேண்டியது Send SMS எனும் இடத்தில் தேவையான தொலைபேசி இலக்கத்தை Type செய்து Enter செய்ததும் தொன்றும் Window இல் குறித்த Contact இற்கு பெயர் ஒன்றைகொடுப்பது தான், பெயரை Enter செய்ததும் Chat Window தோன்றும். இனி என்ன Chat தான்.
இதில் இன்னொரு விடயம் என்னவெனில், எப்போதும் உங்கலுக்கு 50 SMS கள்லே அனுப்ப முடியும். ஒவ்வொன்றாக அனுப்பும் போது Messages remaining என்பதில் ஒவ்வொன்றாகக் குறையும். பயப்பட வேண்டாம், மறு முனையில் இருந்து உங்களுக்கு Chat இல் reply வந்தால் இந்த எண்ணிக்கை கூடி விடும்.
சரி அப்படின்னா Sri Lanka நன்பர்களே G-talk Mobile Chat பன்னலாமே…
No comments:
Post a Comment