D RAM இற்குப் பதிலாக RE RAM - தமிழ் IT

Latest

Tuesday, April 10, 2012

D RAM இற்குப் பதிலாக RE RAM

ஆடுத்த தலைமுறைக்கான RAM தொழிநுட்பம் அறிமுகமாகிறது.

elpida-memory-logoகணனியில் வேலை செய்யும் போது அந்த வேளைகளை தற்காலிகமாக நினைவில் வைத்திருக்கும் ஒரு முறை இருப்பதை நாம் அறிவோம். ரெம் (RAM – Random Access Memory) எனும் தற்காலிக நினைவகம் என்பது இதனையாகும். ரெம் இல் ஒரு விடயத்தை நினைவில் வைத்துக்கொள்ள மின்சாரம் அவசியமாகிறது, கணனியை மூடி விடும் (Shut Downசெய்யும்) போது மின் இனைப்பு துண்டிக்கப்படுவதால் ரெம் இல் இருக்கும் பதிவுகள் அழிந்துவிடுகின்றன.elpida-pc800-ecc_4833 இதனால் இதை வொலடைல் (Volatile) மெமரி என்றும் அழைக்கின்றனர். என்றாலும் மின் இனைப்பு துன்டிக்கப்பட்டாலும் தரவுகளை நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய புதிய ரெம் வகையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. ரீரெம் (Re RAM – Resistance RAM) என அழைக்கப்படும் இவ் ரெம் வகை ஜப்பானின் எல்பிடா (Elpida) நிறுவனத்தின் உற்பத்தியாகும்.

தற்போதுள்ளா கணனிகளில் அதிகளவில் பாவனையில் உள்ளது டீரெம் (DRAM – Dynamic RAM) ஆகும். தரவுகளை பெற்றுக்கொள்ளல் அவற்றை மீண்டும் வழங்கள் என்பவற்றை மிகவும் வேகமாக செய்யும் ஆற்றல் இந்த DRAM இற்கு உள்ளது. இவ்வாறான ஒரு பரிமாற்றத்திற்கு செலவாகும் காலம் நெனோ செக்கன் (அல்லது ஒரு செக்கனைல் நூறு கோடியில் 10பங்கு) எனும் மிகக் குருகிய காலமாகும்.ReRAM இலும் இதே வேகத்தில் பரிமாற்றம் இடம்பெறுகிறது. இதனால் DRAM இற்குப் பதிலாக ReRAM பாவிப்பதில் எந்த சிக்கலும் இல்லை எனலாம்.

RAM-Memory-PC-DDR2-2GB-800MHzமின்சாரம் துண்டிக்கப்பட்ட உடன் நினைவில் உள்ளவற்றை இழக்கும் DRAM இற்குப் பதிலாக Flash Memory ஒன்றை பாவிக்க முடியாதா என சில வேளை கேள்வி எழலாம். இது முடியாத காரியமாகும், ஏனெனில் Flash Moemory களில் தரவுப் பரிமாற்றம் இடம்பெறுவது மிகவும் மந்தமான வேகத்திலாகும். எனவே USB Flash Drive போன்ற RAM ஒன்றின் மூலம் சாதாரன DRAM ஒன்றில் வேளை செய்வது போன்று வேகமாக செயலாற்ற முடியாது போகும். Flash Memory ஐ கைவிட்டு வேறு விதமான ஒன்று பற்றி விஞ்ஞானிகள் சிந்திக்க நேர்ந்தது இதனாலாகும்.

மின் துண்டிப்பின் போது தரவுகளை இழக்காமல் இருக்க புதிய வழிகளை ஏரலமான உற்பத்தியாளர்கள் ஆராய்ந்தது மட்டுமல்லாது, பல உற்பத்திகளையும் மேற்கொண்டனர். அவற்றுள் Everspin நிருவனத்தின் M RAM (Magneto Resistive RAM), Micron நிறுவனத்தின் PCM (Phase Change Memory), Samsung நிறுவனத்தின் Nanvolatile தொழிநுட்பத்திலான STTRAM (Spin Transfer Torque RAM), Unity நிறுவனத்தின் CMDX (Complementary Metaloxide), Adesto நிறுவனத்தின் CB RAM (Conductive Bridging RAM), அதேபோல Racetract என்பது Intel இன் தயாரிப்பகும்.

article_imgமேலே சொல்லப்பட்ட அனைத்தும் வேகத்தில் குறைந்ததாகவும் அல்லது விலை அதிகமானதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. என்றாலும் இங்கு நாம பார்த்த Re RAM வேகத்தில் DRAM ஐப் போன்றே இருப்பதோடு விலையும் DRAM இன் விலக்கு ஒத்ததாகவே கன்னப்படுகின்றமை அனைவரது வரவேற்பைப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Pages