விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புரோரர் 10 - தமிழ் IT

Latest

Friday, November 30, 2012

விண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புரோரர் 10

Captureஅனைவரும் எதிர்பார்த்தபடி, மைக்ரோசாப்ட் நிறுவனம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 பிரவுசர் பதிப்பினை, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கென வடிவமைத்து, அதன் வெளியீட்டிற்கு முந்தைய சோதனைத் தொகுப்பினை (IE10 Release Preview) நவம்பர் 13ல் வெளியிட்டுள்ளது. இது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மட்டும் தான். விண்டோஸ் 8 மற்றும் ஆர்.டி. சிஸ்டங்களுடன், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இணைந்தே தரப்படுகிறது. விஸ்டா மற்றும் முந்தைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 இயங்காது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 பிரவுசர் வெளியான போது, அதன் இயக்கத்தினை, விஸ்டா மற்றும் எக்ஸ்பியிலிருந்து மைக்ரோசாப்ட் தள்ளியே வைத்தது. பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 இயங்காது என அறிவித்த நிறுவனம் மைக்ரோசாப்ட் ஒன்றுதான்.
வெளியீட்டிற்கு முந்தைய பதிப்பு எனத் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பதிப்பினை மைக்ரோசாப்ட் அழைப்பதால், இந்த பிரவுசரைப் பொறுத்தவரை, முழுமையான இறுதி வடிவத்தினை மைக்ரோசாப்ட் அமைத்துவிட்டது என்றே எதிர்பார்க்கலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்ட இ.எ. 9, ஒரு மாத கால அளவில், 2011 மார்ச் 14ல் வெளியானது. அதே போல, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இந்த ஆண்டின் இறுதிக்குள் எதிர்பார்க்கலாம்.
328446-internet-explorer-ie-browser-logoஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10ன் சிறப்பான, தொட்டு இயக்கும் வசதி, நிச்சயம் விண்டோஸ் 7க்கான பதிப்பில் கிடைக்காது. ஆனால், அதிகம் பேசப்படும் “Do Not Track” என்னும் தனிநபர் செல்லும் இணைய தளங்களைக் கணக்கெடுத்துப் பதியாத வசதி இதிலும் இணைந்தே கிடைக்கிறது. முதன் முதலில் இந்த பிரவுசரை இயக்குகையில், திரை ஒன்று காட்டப்பட்டு, இந்த வசதி தேவை இல்லாதவர்கள், தாங்கள் செல்லும் தளங்களைக் கண்டு கொண்டு பட்டியலிடும் வசதியை வேண்டுபவர்கள், அதற்கான தேர்வினை அமைக்க ஆப்ஷன் தரப்படுகிறது.
ஏற்கனவே, இணையதளங்களில் விளம்பரங்களை வெளியிடுபவர்கள், இந்த “Do Not Track” வசதி பிரவுசரில் இணைந்தே தரப்படுவதனை வர்த்தக ரீதியாக எதிர்த்தனர். இப்போதும் விண்டோஸ் 7 தொகுப்பான பிரவுசரிலும் இந்த வசதி தரப்படுவதால், எதிர்ப்பு வலுக்கலாம்.
தற்போது விண்டோஸ் 7, பன்னாட்டளவில் 45% பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுவதால், அனைவரும் தானாகவே அப்கிரேட் செய்யப்படும் வசதியின் மூலம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10க்கு மாறிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். அவ்வாறு மாறுகையில் “Do Not Track” வசதி தானாகவே இவர்களுக்குக் கிடைக்கும்.
இந்த வெளியீட்டிற்கு முந்தைய சோதனைத் தொகுப்பினை இன்ஸ்டால் செய்திட விரும்புபவர்கள், http://windows.microsoft.com/enUS/internetexplorer/downloadie என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் இணைய தளத்தை நாடலாம்.

நன்றி கம்பியூட்டர் மலர்.

No comments:

Post a Comment

Pages