FaceApp உன்றைய தினங்களில் பிரபல்யமான தலைப்பு. எமது தகவல்கள் திருட்டுத்தனமாக களவாடப்படுகிறதாம், எமது கைபேசி ஹெக் செய்யப்படுகிறதாம். இது தான் இன்று அனேகரின் பேச்சு. போதாமைக்கு டெக் செய்திகளை (தொழிநுட்ப செய்திகளை) வெளியிடும் இணையத்தளங்களும் இதனையே சொல்கின்றன.
ஆம் உன்மையில் இப்படியொன்று நடக்கிறதா என்றால்? ஆம் என்பதே பதில். அப்படியானால் ஏன் மேலே இவ்வளவு கதை என்று கேட்பீர்கள். இந்த இரகசியத் திருட்டு FaceApp மட்டும் செய்வதல்ல என்பதே எனது பதில்.
உங்கள் Mobile இல் நீங்கள் ஒவ்வொரு App ஐ நிறுவும் போதும் நாம் Permission எனும் பெயரில் வழங்குகின்ற அங்கீகாரங்களில் பெரும்பாலானவை இவ்வாறான தகவல் திருட்டுக்காக நாம் வழங்கும் அங்கீகாரங்களே. சில App கள் நம்மிடம் சொல்லி அங்கீகாரம் பெற்றுவிட்டு திருடுகின்றன, இன்னும் சில சொல்லாமலே திருடுகின்றன.
இந்த FaceApp விவகாரம் இவ்வளவு பூதாகரமாவதற்குக் காரனம் இது ஒரு ரஷ்யாவின் தயாரிப்பு என்பதனாலே. FaceApp அமேரிக்காவில் மிகவும் பிரபல்யமாக ஆரம்பித்தது. பெரும்பாலான அமேரிக்கர்கள் அதற்கு அடிமையாகிவிட்டனர் என்பதை அமேரிக்காவே ஒப்புக்கொள்கிறது. இதன் மூலம் அமேரிக்காவின் இரகசியங்களை ரஷ்யா திருடப் பார்க்கிறது என்ற அச்சம் அமேரிக்காவை ஆட்டியது.
இதே போன்ற ஒரு வேளையை 2016 இல் அமேரிக்காவும் செய்தது. அது தான் Prisma செயலி. தமது படங்களை சித்திரங்களை போல மாற்றும் ஒரு கிரபிக் செயலி. இதுவும் FaceApp இன் வேளையை செய்த்தாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. ஒரே வித்தியாசம் FaceApp ரஷ்யாவுக்காக இந்த வேளையை செய்தது, Prisma அமேரிக்காவுக்காக செய்தது.

நாம் பயன்படுத்தும் WhatsApp, Viber, Facebook எல்லாமே எமது தரவுகளைத் திருடாமல் இல்லை. அதனால் தான் நாம் அதிகம் WhatsApp இல் Chat செய்த விடயங்கள், நமக்கு Facebook இல் விளம்பரங்களாக காட்டுகின்றன. அதற்காக FaceApp நியாயப்படுத்தவில்லை. தெரியவரும் வகையில் FaceApp மிகவும் ஆபத்தானதாகவே தெரிகிறது.
கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லி முடிக்க விரும்புகிறேன். நாம் பயன்படுத்தும் App களின் நம்பகத்தன்மையை நம்மால் கணக்கிட முடியாது. எனவே எது தேவையோ அதனை தேவைக்கு மட்டும் தேவையான அளவு பயன்படுத்தினால் இப்போதைக்கு ஆரோக்கியமானது. கண்ட App புதிய களையெல்லாம் டிரெண்ட் என்ற பெயரில் நமது தனித்துவத்தையும் அந்தரங்கங்களையும் அடகுவைத்து அள்ளிப்போட்டுக்கொள்ளத் தேவையில்லை.
No comments:
Post a Comment