இலங்கையில் வேளையை ஆரம்பித்து விட்டது Google Transit - தமிழ் IT

Latest

Tuesday, July 16, 2019

இலங்கையில் வேளையை ஆரம்பித்து விட்டது Google Transit



நான்கு தினங்களுக்கு முன்னர் Google Transit சேவை இலங்கைக்கையில் அறிமுகமாகவுள்ள தாகவும், அதர்கான தரவுகள் போக்குவரத்து அமைச்சரால் தேசிய போக்குவரத்து ஆணையத்தின் 25 வது ஆண்டு நிறைவுக்கு விழாவின் போது உத்தியோகபூர்வமாக கூகில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமை தொடர்பாகவும் செதியை வெளியிட்டிருந்தோம்.

நான்காவது தினமான இன்று Google அதன் வேளையை நிரைவு செய்து பயனர்களுக்கு வழங்கி விட்டது. ஆம், இன்று முதல் Google Transit சேவை இலங்கையில் இயங்க ஆரம்பித்துவிட்டது. இனங்கையின் பிரதான பொதுப் போக்குவரத்து சேவைகளான பேரூந்து (பஸ்) மற்றும் புகையிரம் ஆகிய இரண்டு சேவைகளையும் உள்ளடக்கியதாக சேவை வழங்கப்படுகிறது.

எது எவ்வாறாயினும் ஆரம்பத்தில் நாம் எதிர்பாத்ததை விட சிறப்பாக தரவுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. கொழும்பு நகராம் மற்றும் பிரதான நகரங்களை உள்ளடக்கிய பஸ் ரூட் மற்றும் நேரசூசி (Time Table), அத்தோடு அனைத்து பிகையிரத நிலையங்களையும் உள்ளடக்கிய புகையிரத நேரசூசி 
(Time Table) என்பவற்றை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளமை பயனுள்ள ஆரம்ப நகர்வாக சொல்ல முடியும்.

இனி என்ன Google இருக்க பயமேன்...

No comments:

Post a Comment

Pages