3 டெரா பைட் ஹார்ட் டிஸ்க்

ஹார்ட் டிஸ்க் தயாரிப்பில் பல ஆண்டுகளாக முன்னணியில் இயங்கி வரும் ஸீ கேட் நிறுவனம் அண்மையில், 3 டெரா பைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டது. இது ஏறத்தாழ 3,000 கிகா பைட்ஸ் ஆகும். இதன் இன்னொரு சிறப்பு, இந்த ஹார்ட் டிஸ்க் விண்டோஸ் எக்ஸ்பியிலும் செயல்படும் என்பதே. முன்பு, 1980 ஆம் ஆண்டு வாக்கில், பெர்சனல் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் ஹார்ட் டிஸ்க்குகள் 2.1 டெரா பைட் அளவுக்குக் குறைவாகவே இருக்க வேண்டும் என முடிவெடுக்கப் பட்டு, அந்த வரையறைக் குள்ளாகவே டிஸ்க்குகள் தயாரிக்கப்பட்டன. ட்ரைவ் ஒன்றில் டேட்டா பதியப்படுகையில், ஒரு குறிப்பிட்ட அளவில் அடுக்கப்படும். எனவே தான் இந்த வரையறையை, டிஸ்க் தயாரிப்பு நிறுவனங்கள் மேற் கொண்டன. ஆனால் காலப் போக்கில், இன்னும் அதிகக் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க்குகளையும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் கையாள முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்கேற்ப விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் உருவாக்கப்பட்டன.
இப்போதும் கூட 2.1 டெரா பைட் டிஸ்க்கினைக் கையாள்கையில், சிக்கல்கள் உள்ளன. டிஸ்க்கினைப் பல பகுதிகளாகப் பிரித்துத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.
3 டெரா பைட் டிஸ்க்கினை முதலில் தயாரித்து வழங்கிய நிறுவனம் ஸீகேட் தான். இந்த டிஸ்க்கையும், போர்ட்டபிள் எக்ஸ்டர்னல் ட்ரைவாகத்தான் பயன்படுத்த முடியும். வெஸ்டர்ன் டிஜிட்டல் மற்றும் ஹிடாச்சி நிறுவனங்கள், 3 டெரா பைட் டிஸ்க்குகளைத் தயாரித்துள்ளன என்றாலும், இவற்றைப் பழைய கம்ப்யூட்டர்களில் பயன்படுத்துவது இயலாததாகவே உள்ளது எனப் பலர் தெரிவித்துள்ளனர்.
நன்றி : கொம்பியூட்டர் மலர்

No comments

Powered by Blogger.