Pen Drive களை பாதுகாப்பாக அகற்ற… - தமிழ் IT

Latest

Tuesday, April 5, 2011

Pen Drive களை பாதுகாப்பாக அகற்ற…

இன்றைய உலகில் Pen Drive என்பது இன்றியமையாத ஒரு சாதனமாக மாறி விட்டது எனலாம், சொந்தமாகக் கணனி இருந்தாலும் இல்லாவிட்டலும் Pen Drive மட்டுலம் கட்டாயம் எல்லோரிடமும் இருக்கும். 64mb, 128mb, 256mb என ஆரம்பித்த இந்த Pen Drive இன் கொள்ளளவு இன்று 8GB, 16GB, 32GB என கூடிக்கொண்டே போகின்றது.
என்றாலும் இந்த Pen Drive இனை முறையாகப் பாவிப்பவர்கள் மிகச் சிலரே, இதனாலேயே அதிகமான Pen Drive களில் தொகுப்புகள் திடீரென அழிதல், Open செய்ய முடியாமல் போதல் என ஏராலமான சிக்கல்கள் தோன்றுகின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம் முறையற்ற விதத்தில் Pen Drive களை பாவித்தல் ஆகும், விசேடமாக Pen Driveஐ Remove செய்யும் போது சரியான விதத்தில் Remove செய்யாமை ஆகும்.
சில வேளை நாம் வழமையான முறையில் Pen Driveஐ Remove செய்ய எத்தனிக்கும் போது அது Remove ஆக மறுக்கும், சில Programe Run ஆவதாகச் சொல்லும். இருந்த போதிலும் நம்மால அவற்றை சரியாக கண்டறிய முடியாதிருக்கும். எனவே நாம் அந்த எச்சரிக்கைகளை மீறி Pen Driveஐ அகற்றுவோம். இதன் போது உங்கள் Pen Drive செயல் இழந்துவிட வாய்ப்பு இருக்கின்றது, அத்தோடு Pen Drive இல் உள்ள உங்கள் File கள் அழிந்துவிட அல்லது பாதிப்பட (Cropped) ஆகிவிட வாய்ப்புள்ளது.
என்றாலும் உங்கள் கணனியில் USB Safely Remove மென்பொருள் இருந்தால் இந்த சிக்கள் களில் இருந்து விடுபடலாம். ஏனெனில் இந்த USB Safely Remove மூலம் உங்கள் Pen Drive மட்டுமல்லாது அனைத்து USB சாதனங்களையும் முறையாகக் கையாள முடிகிறது.
USB Safely Remove மென்பொருள் மூலம் மிக இலகுவாக USB சாதனத்தை நிறுத்துவதோடு என்னென்ன Programe கள் Run ஆகின்றன என்பதையும் காட்டுகிறது. அப்போது அவற்றை முறைப்படி Close செய்துவிட முடியும், சில வேளை ஏதாவது நமது Pen Drive இலிருந்த Run ஆகிக்கொண்டிருந்தால் அவற்றை பலவந்தமாக நிறுத்தவும் முடியும். இவற்றுக்கு மேலதிகமாக USB Modem, USC CD Drive போன்றவற்றினையும் இதன் மூகலம் முறைப்படி அகற்ற முடியும்.





No comments:

Post a Comment

Pages