ரொம்மில் இருந்தே இயங்கும் புதிய லினக்ஸ் இயங்குதளம் - போர்டஸ் (Porteus) - தமிழ் IT

Latest

Sunday, May 15, 2011

ரொம்மில் இருந்தே இயங்கும் புதிய லினக்ஸ் இயங்குதளம் - போர்டஸ் (Porteus)


இலவசமாக வழகப்படும் ஏராளமான இயங்குதளங்கள் (Operating Systems) பாவனையில் உள்ளன, அவை ஒன்றையொன்று முந்திக்கொண்டு புதிய பல அம்சங்களோடு நாளுக்கு நாள் வெளிவருகின்றன. அவற்றுள் முற்றிலும் ரொம் (ROM) இலிருந்தே இயங்கும் இயங்குதளங்கள் (Operating Systems) பிரபலமானவை. இதில் புதிதாக இனைந்துள்ள அங்கத்தவர் தான் போர்டஸ் (Porteus) இயங்குதளமாகும்.
போர்டஸ் (Porteus) லினக்ஸ் இன் வழி வந்த ஒரு Operating System ஆகும். இதில் ஏராலமான் புதிய குனாதிசயங்கள் உள்ளன  அவற்றுல் இதை ஒரு பென் டிரைவில் இருந்தும் இயக்க முடியுமாயிருப்பது சிறந்த ஒரு குனாதிசயமாகக் கூற முடியும்.
போர்டஸ் (Porteus) இயங்கு தளத்தை இனையத்தளத்தில்(www.porteus.org) இனையத்தளத்திலிருந்து இலவசமாக பதிவிரக்க முடியும். இது வெறும் 300MB கொண்ட ஒரு சிறிய iso File ஆக கிடைக்கிறது. இதனை பென் டிரைவில் அல்லது ஏதாவது எக்ஸ்டேனல் ஹார்ட் டிஸ்கில் நிறுவி பாவிக்க முடியும். இந்த போர்டஸ் (Porteus) ஆனது உங்கள் கணனியை பூட் (Boot) செய்ய வெறும் 30 – 40 செக்கன்களையே செலவிடுமாம். அதே வேளை கணனியை Shut Down செய்வதற்கும் சில வினாடிகளே செல்கின்றன.
போர்டஸ் (Porteus) மிகவும் வேகமா இயங்கும் ஒரு Operating System ஆகும். ஏனைய Live Operating System களை போலன்றி நிறுவப்பட்டுள்ள நிகழ்ச்சிகளும் மிக வேகமாக திறக்கப்படுகின்றன். ஏனெனில் ஏனைய ல்னக்ஸ் நிரல்களில் போன்று இங்கு புரோக்ராம்கள் நொடந்தும் இயங்கிக்கொண்டிருக்காது, மாறாக தேவைப்படும் போது மாத்திரமே இயங்கும், இதனால் வீனே செலவாகும் மெமரியை இதன் வேகத்திற்காக பயன் படுத்தும் நுட்பத்தை இதில் கையாண்டுள்ளனர். இன்னும் சொல்லப்போனால் இது லினக்ஸ் லைவ் ஸ்கிரிப்ட் (Linux Live Script) முறியின் ஒரு முறை என்றும் கூற முடியும். ஸெலெக்ஸ் வெயா லினக்ஸ் Operating Systemஆனது லினக்ஸ் லைவ் ஸ்கிரிப்ட் (Linux Live Script) நுட்பத்தில் மீளமைக்கப்பட்டு இந்த போர்டஸ் (Porteus) வெளியாகியுள்ளது. இது சில காலமாக ஸெலெக்ஸ் ரீமிக்ஸ் (Slax Remix) எனவும் அழைக்கப்பட்டது.
நேரடியாக  www.porteus.org இனையத்தளத்தில் தரவிரக்க முடியாவிட்டால், Googleஇல் Porteus Downloaலென் சேர்ச் செய்து வேறு சில இனையத்தளங்களில் இருந்தும் தரவிரக்கிக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Pages