புதுப் பொழிவுடன் வின்டோஸ் 8 (Windows 8) - தமிழ் IT

Latest

Saturday, July 16, 2011

புதுப் பொழிவுடன் வின்டோஸ் 8 (Windows 8)

Windows-8-Logo மைக்ரோசெப்ட் நிறுவனத்தின் அடுத்த இயங்குதளமான வின்டோஸ் 8 தொடர்பாக நாம் ஏற்கனவே ஒரு பதிவில் பார்த்தோம். இது அன்மையில் உத்தியோக பூர்வமாக வின்டோஸ் 8 தொடர்பான வெளியான சில தகவல்களாகும்.

மைக்ரோசொப்ட் இன் அடுத்த இயங்குதளமான வின்டோஸ் 8 எதிர்வரும் 2012 இல் வெளியிடப்படுமென, கடந்த மே மாதம் 23 ஆந் தேதி ஜப்பானின் டோக்கியோவில் மைக்ரோசொப்ட் இன் பிரதான நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் பெல்மர் கூறினார். என்றாலும் இந்த வின்டொஸ் 8 இன் புதிய தகவல்களை மைக்ரோசொப்ட் வெளியிட்டது கடந்த ஜூன் 4ஆந் திகதி கொம்பியூடெக்ஸ் தொழிநுட்ப கண்காட்சி (Taipei Computex 2011) இன் போது உத்தியோகபூர்வ வீடியோ காட்சியொன்றின் மூலமாகும். வின்டோஸ் 8 ஆனது வின்டொஸ் 7 இலிருந்து எவ்வகையில் வேறுபடுகிறது என கூறும் ஒரு வீடியோவாக இது அமைந்திருந்தது.

வின்டோஸ் 8 பிரதானமாக ஏனையவற்றிலிருந்து மாறுபடுவது அதன் தோற்றத்தில் (Interface) ஆகும். அது ஏனைய வின்டோஸ்  Oerating System களிலிருந்து முற்றிலும் மாறுமட்டிருக்கின்றது. இதன் புதிய இன்டர்பேஸ் “டைல்” (Tiles) என அழைக்கப்படும் விசேட அம்சத்தை உள்ளடக்கிய தோற்றத்தைக் கொண்டுள்ளது . Windows-8-start-menu1 அதாவது டைல் எனும் சிறு சதுரங்களின் மூலம் புரோக்ராம்கள் ஒழுங்கமைக்கப்படிருக்கின்றன. அவற்றுல் “டெஸ்க் டொப்” (Desktop) என பிரத்தியேக Tile ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த Desktop Tile மூலம் விரும்பியோருக்கு வேண்டிய நேரத்தில் நாம் சாதாரனமாக பாவிக்கும் Desktop முறைக்கு Interface ஐ மாற்றிக்கொள்ள முடியும். அத்தோடு எமது வின்டொகளின் நிறம் எமது Desktop இல் உள்ள Wallpaper இன் நிறத்திற்கு ஏற்ற வித்ததில் தானாக மாறும்.

வின்டோஸ் 8 இல் Office மென்பொருளில் உள்ளது போன்ற Ribbon Bar ஒன்றும் இனைக்கப்பட்டுள்லது, இது Windows Explore இற்கும் பதிலாக சேர்க்கப்பட்டதாகும். மேலும் இங்கு ஒரு PDF reader ஒன்றும் இனைக்கப்பட்டுள்ளது, இது Modern Reader என குறிக்கப்பட்டுள்ளது. Task Manger ஐ Modern Task Manager என புது மாற்றங்களுடன் பெயரிட்டுள்ளனர்.

ஏனைய வின்டோஸ் OS களை விட வேகமாகவும், சிறப்பாகவும் இயங்கும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புது முறையை ஹைபிரைட் பூட் (Hybrid Boot) என குறிப்பிடுகின்றனர். அது மட்டுமல்லாது இந்த windows 8 ஐ USB Drive இல்  நிறுவு அதன் மூலமும் இயக்கலாம். இது இத் தொழிநுட்பம் போடபல் வேர்க் ஸ்பேஸ் (Portable Workspace) என பெயரிடப்பட்டுள்ளது.

Windows-8-App-Store_M-S-288532-3 மேலும், windows 8 இல் உள்ள Tile இல் கானப்படும் Windows Store எனும் Tile இன் மூலம் windows 8 இற்கு பொருந்தக்கூடிய மென்பொருற்களை தரவிரக்கக்கூடிய விசேட இனையப் பக்கம் காட்சியளிக்கும், இங்கு ஏராலமான மென்பொருற்கள் தரவிரக்க வசதியளிக்கப்பட்டுள்ளன. பாவனையாளரின் தனிப்பட்ட பக்கம் (User Personal Page), வின்டோஸ் லைவ் எகௌன்ட் (Windows Live Account) ஆகியவற்றை இனைக்கும் Tile ஒன்றும் இங்கு இனைக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தோடும், எதிர்வரும் ஆண்டு வெளியாகவுள்ள windows 8  ஆனது இனைய பாவனைக்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் விட windows 8 ஆனது டச் ஸ்கிரீன் (Touch Screen)  கணனிகளிலும் சாதாரன Desktop கணனிகளிலும் பாவிக்க முடிவதோடு, தாற்போது நாம் பாவிக்கும் windows 7 நிறுவ இடமளிக்கும் கணனிகளின் வேகம் இந்த windows 8 இற்கும் போதுமானது என்பது நமக்கு ஆறுதலான செய்தியாகும்.

வரும் வரை காத்திருப்போம்…

No comments:

Post a Comment

Pages