கூகுள் அதிபரை முந்தினார் சூகர்பெர்க் !!! - தமிழ் IT

Latest

Saturday, July 2, 2011

கூகுள் அதிபரை முந்தினார் சூகர்பெர்க் !!!

ஜூலை 2,பாஸ்டன்:சொத்து மதிப்பில் கூகுள் இணையதளத்தின் நிறுவனர்களான செர்ஜி பிரின், லேரி பேஜ் ஆகியோரை சூகர்பெர்க் முந்தினார்.

சூகர்பெர்க் நிறுவிய சமூக இணையதளமான பேஸ்புக் தற்போது உலக அளவில் அதிகவாடிக்கையாளருடன் பிரபலமாக திகழ்கிறது.

இந்நிலையில் சராசரியாக ஸி1317 முக மதிப்பு கொண்ட பேஸ்புக்கின் 2.25 லட்சம் பங்குகளை ஜிஎஸ்வி கேபிட்டல் நிறுவனம் வாங்கியது.

ஜிஎஸ்வி முதலீடு மூலம் ரூ.60,750 கோடியாக இருந்து சூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு, ரூ.81,000 கோடியாக அதிகரித்தது. இதையடுத்து சொத்து மதிப்பில் கூகுள் நிறுவனர்களான செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி சூகர்பெர்க் முதலிடம் பிடித்தார்.

மேலும் உலகின் தொழில்நுட்பத் துறையை சேர்ந்த பெரும் பணக்காரர்கள் பட்டியலில் ரூ.81,000 கோடி சொத்து மதிப்புடன் 3ம் இடத்தை பிடித்தார் சூகர்பெர்க். இந்த பட்டியலில் ரூ.2.52 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் ஒராக்ல்ஸ் லேரி எலிசன் ரூ.1.78 லட்சம் கோடியுடனும் முன்னிலை வகிக்கின்றனர்.நன்றி : சிந்திக்கவும்.நெட்

No comments:

Post a Comment

Pages