Android - என்ட்ரொய்ட்

androidஇன்றைய உலகில் மிகவும் வேகமாக பிரபல்யமாகும் மொஐல் போன்களுக்கன இயங்கு தள மென்பொருள் இதுவாகும். கடந்து செல்லும் ஒவ்வொரு செக்கனுக்கும் உலகில் விற்பனையாகும் Android உடன் கூடிய ஸ்மாட் போன் (Smart Phone) களின் என்னிக்கை 13 ஆகும். அப்படியாயின் ஒரு நாளில் பாவனைக்கு வரும் Android உடன் கூடிய ஸ்மாட் போன் (Smart Phone) களின் என்னிக்கை ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரத்தை (550,000) தான்டிவிடுகின்றன. இன்று உலகில் பாவனையிலுள்ள இவாறான Android ஸ்மாட் போன் (Smart Phone) களின் என்னிக்கை இருபது கோடியைத் (அல்லது 200 மில்லியனை) தாண்டியுள்ளது.
இந்த Android இயங்குதளம் பயன்படுத்தக் கூடிய கையடக்க சாதனங்களாக, ஸ்மார்ட் போன் அதாவது கணனி மூலம் செய்யக்கூடிய வேளைகளை செய்யும் திறனுள்ள கையடக்கத் தொலைபேசிகள், அல்லது டெப்லட் பீசி (Tablet PC) எனும் கையி எடுத்துச் செல்லக் கூடிய சிறிய ரக கணனிகள்.  இவற்றுக்கு மேலதிகமாக E-Readerகள், Note Book வகைகள் போன்றவற்றிலும் இதனைப் பயன்படுத்த முடியும்.
எத்தனையோ கையடக்கத் தொலைபேசிகளுக்கான இயங்கு தளங்கள் இருக்க அவற்றின் இடையே இந்த Android இயங்குதளம்  மாத்திரம் ஏன் இந்த அளவு பிரபல்யம் ஆகியுள்ளது என கேட்டால் அதற்கு ஒன்றல்ல, ஏராலமான காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது Android இயங்குதளம் ஒரு பரிபூரன மொபைல் போன் இயங்குதளமாக இருப்பதாகும்.
Android-3.0சுமார 10 ஆண்டுகளுக்கு முன், அதாவது 2001ஆம் ஆண்டில் Android இயங்குதள நிர்மானம் ஆரம்பமாகியது. அமரிக்கர்களான என்டி ரூபின், ரிச் மைனர், க்ரிஸ் வைட் மற்றும் நிக் ஸியர்ஸ் ஆகிய கணனி மென்பொருள் வடிவமைபாளர்களே இதன் முன்னோடிகளாவர். பாவனையாளர்களின் தேவைகளை உச்ச அளவில் நிவர்த்திசெய்யக் கூடிய ஒரு கணனி நிகழ்ச்சியை உருவாக்குவதே இவர்களின் இலக்காக இருந்தது. இதன் நோக்கில் 2003 ஆம் ஆண்டு என்ட்ரொய்ட் இன்கோபரஷன் (Android Inc.) எனும் நிறுவனத்தை நிறுவினர். எனினும் அது வெற்றிகரமான சாத்தியங்களிக் காட்டவில்லை. வருமானம் ஈட்டல் தோல்வியில் மிடிந்ததை அடுத்து இழுத்து மூடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தில் Google நிறுவனம் Android ஐ காப்பற்றியது. அதாவது, Android நிறுவனத்தை கொள்வனவு செய்தது. நிறுவனத்தை மாத்திரமன்றி என்டி ரூபின் உள்ளிட்ட குழுவையும் தன்னுடன் இனைத்துக் கொன்டது.
android22005 ஆகஸ்டில் இடம்பெற்ற இந்தக் கொடுக்கல் வாங்களைத் தொடர்ந்து மொபைல் சாதனங்களுக்கான நவீன இயங்குதளத்துக்கான வேளை ஆரம்பமானது. அது கூகில் என்ட்ரொய்ட் (Google Android) எனும் பெயரில் ஆகும். என்டி ரூபின் தலைமையில் கூகில் இன் பனியாளர்களின் ஒத்துளைப்புடன் இந்த புதிய இயங்குதளம் 2007ல் நிர்மானிக்கப்பட்டது.
Android Mobile OS ஆனது Linux இயங்கு கேர்னல் இன் அடிப்படையில் நிர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். எக்ஸ்.எம்.எல். (XML), சீ (C), ஜாவா (Java) மற்றும் C++ ஆகிய நிரலாக்க மொழிகள் மூலங்களால் இது நிறுவப் பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக இந்த Android Mobile OS ஐ ஒரு திறந்த மூலப் மென்பொருள் (Open Sauce) ஒன்றாக கூற முடியும். அதாவது Android OS ஐ வேண்டியோருக்கு இலவசமாக பெற்றுக் கொள்ள முடிவதோடு, தமக்கு வேண்டிய விதத்தில் மாற்றிப் பயன்படுத்திக் கொள்ள முடிவதாகும். என்றாலும் அது மூல நிறுவனத்தில் அனுமதியுடனே செய்யப்படல் வேண்டும்.  அதாவது, ஓபன் ஹேன்ட்செட் எலையன்ஸ் (Open Handset Alliance) நிறுவனத்தின் அனுமதியுடனே இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.
android-3Android Mobile OS இன் மூலப் பதிப்பின் வேளைகள் நிறைவு கண்ட காலப்பகுதியில் (2007 நவம்பர் மாதம்) கூகில் நிறுவனத்தின் தலைமையில் ஓபன் ஹேன்ட்செட் எலையன்ஸ் (Open Handset Alliance) நிறுவனம் நிறுவப்பட்டது. இது உலகில் உள்ள முன்னணி கையடக்கத் தொலைபேசி மற்றும் உதிரிப் பாக உற்பத்து நிறுவனங்களின் கூட்டு ஆகும். Android Mobile OS இற்கு ஏற்ற வகையில் கையடக்க சாதனங்களை வடிவமைப்பதையும், புதிய சாதனங்களுக்கு ஏற்ற வகையில் Android Mobile OS இன் மேம்பாடுகளை மேற்கொள்வதையும் கூட்டாக மேற்கொள்ளும் ஒரு அமைப்பாகவே இந்த Open Handset Alliance செயற்படுகிறது.
பின்னர் 2008 ஆம் ஆன்டின் செப்டம்பர் மாதம் 20ம் திகதி Android Mobile OS இன் முழுமையான பகுப்பு மூல நிரல் (Source Code) கூகில் நிறுவனத்தால் பகிரங்கப்படுத்தப்பட்டது. அந்த பகுப்பு மூல நிரல் (Source Code) களுக்கு ஏற்றவிதத்தில் துனை மென்பொருற்கள் அல்லது Apps நிர்மானத்திற்கு பக்க துனையாகும் விததில் ஆகும்.
இவ்வாரு நிர்மானிக்கப்படும் Apps பரிமாற்றிக்கொள்ள தேவையான இடத்தை Google ஏற்கெனவே நிர்மானித்திருந்தது, அதாவது Android Market எனும் தளம் இதற்கு இடமளிக்கிறது. நிர்மானிக்கப்படும் துனை மென்பொருட்களை இந்த Android Mark மூலம் பரிமாரிக்கொள்ள முடியும், விற்பனை செய்யவும் முடியும். எது எவ்வாறாயினும் அனைத்து Apps களும் Google இன் கண்கானிப்பிளேயே பரிமாறப்படும்.
Android_MarketAndroid Mobile OS உள்ள கையடக்கத் தொலைபேசிகள் அதனை வைத்துள்ளவர் எதிர்பார்க்கும் அனத்து சேவைகளையும், அதற்கு அதிகமாகவும் வழங்குகிறது என்றால் மிகையாகாது. அந்த உறுதி நிலையை Android Market (market.android.com) இல் உள்ள Apps மூலமே அடைகிறது. Android Market அறிமுகமாகிய ஆரம்ப கட்டதில் அதன் தளத்தில் குறிப்பிட்ட சில Apps மாத்திடரமே கானப்பட்டன. 2009 ஆம் ஆண்டில் அது 2300 எனும் அளவிலேயே காணப்பட்டது. 2011 ஒக்டோபர் மாதத்தில் Android Market இல் இருந்த Apps களின் என்னிக்கை 319,000 என குறிப்பிடப் படுகிறது. அது 2011 கடைசிக் கட்டமாகும் போது 350,000 ஐ தாண்டி இருக்கும் என கூறப்பட்டது. அது மாத்திரமன்றி 2011 இன் இறுதியில் இந்த Android Market இலிருந்து பதிவிரக்கப்பட்ட (Download செய்யப்பட்ட) Apps களின் என்னிக்கை 10 பில்லியன் என அறிவிக்கப்படுகிறது.
 tmobile-htc-g1-1Android இன் முதலாவது வணிக நோக்கிலான பதிப்பு Android 1.0 ஆகும். அது 2008 செப்டம்பர் மாதம்  23 ஆம் திகதி வெளியிடப்பட்டது. அந்த Android Mobile OS மூலம் இயங்கிய முதலாவது கையடக்கத் தொலைபேசி HTC Dream – G1 வகை சேர்ந்த Smart Phone ஆகும். அன்று முதல் தொடர்ந்து பல்வேறு பதிப்புகள் வெளியாகின. அவை உணவுப் பண்டங்களின் மூலமே குறிக்கப்பட்டன. ஆங்கில அகர வரிசையில் அவை அமைந்திருந்தன. கப் கேக் (CupCake), டோனட் (Donut), இக்லெயா (Éclair), ஃப்ரோயோ (Froyo), ஜிஞ்ஜர் ப்ரட் (Ginger Bread), ஹனி கொம்ப் (Honey Comb) மற்றும் ஐஸ்கிரீம் சேன்விச் (Ice Cream Sandwich) என்பனவே அவையாகும்.
imageஐஸ்கிரீம் சேன்விச் (Ice Cream Sandwich) எனும் Android 4.0 பதிப்பே அதன் மிகப் பிந்திய வெளியீடாகும். 2011 நவம்பர் 28 ஆம் திகதி இது வெளியானது.
அத்தோடு இன்று உலகில் பாவனையில் உள்ள Tablet PC களில் 17% வையில் இந்த  Android Mobile OS பயன்படுத்தப்படுவதோடு, கையடக்கத் தொலைபேசிகளில் இதன் பங்கு 43% ஐ தாண்டி விட்டது. பெயரைச் சொன்னவுடன் யாவரும் தெரிந்து கொள்ளும் ஒரு Mobile OS இருக்குமாயின் அது Android Mobile OS மட்டும் தான் எனலாம். இது இந்த அளவு பிரபல்யம் ஆவதற்கு இதன் திறன் மாத்திரம் துனை நின்றது என கூற முடியாது, மாறாக இந்த Android Mobile OS கையடக்க தொலைபேசி உற்பத்தி நிறுவனங்களுக்கு இலவசமாகவே வழங்கப்படுவதும் ஒரு காரனமகும்.
Android Mobile OS ஐ இலவசமாக வழங்கும் Google நிறுவனம் இலாபம் ஈட்டுவது, Android Market மூலம் Apps விற்பனை செய்வதன் மூலமாகும். உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள சுமார் 10200 Software Developerகள் Google இற்கு இந்த Apps களை வழங்குகின்றனர். இவற்றுல் சில் இலவசமாகவும். சில் பணம் செலுத்தியும் நமக்கு Download செய்துகொள்ள முடியும். இப்போதைக்கு உள்ள Apps களில் 67%வை இலவசமாகவே கிடைக்கின்றன.ஏனையவை சாதரன விலைகளில் (சுமார் 3$) கிடைக்கின்றன. இந்த Android Market மூலம் Apps விற்பனை செய்தல் Google இன் பிரதான வருமான வழிகளில் ஒன்றாகும். 2005 இல் Android Inc. ஐ 50 மில்லியன் டொலர்களுக்கு வாங்கிய Google இன்று இதன் மூலம் மாத்திரம் பல பில்லியன்கள் இலாபமடைகின்றது.

No comments

Powered by Blogger.