டொஷிபா பிலேஷ் எயார்… - தமிழ் IT

Latest

Friday, March 30, 2012

டொஷிபா பிலேஷ் எயார்…

புகைப்படங்கள் மற்றும் தரவுகளை வயர்லஸ் (Wireless) முறையில் பரிமாரிக் கொள்ளக்கூடிய மெமரி கார்ட் (Memory Card) ஓன்றை ஜப்பானின் டொஷிபா நிறுவனம் தயாரித்துள்ளது. உலகின் மிகப் பிரமான்டமான தொழிநுட்பக் கண்காட்சியான கன்சியுமர் இலக்ட்ரொனிக் ஷோ (CES) கண்காட்சியின் போது இது வெளியிடப்பட்டது. இதற்கு பிலேஷ் எயார் (Flash Air) என பெயரிடப்பட்டிருந்தது. தோற்றத்தில் இது சாதாரன எஸ் டி கார்ட் (SD Card) போன்ற அமைப்பிலேயே இருக்கும். அனாலும் இதன் மூலம் இன்னொரு கணனி அல்லது சாதனத்துடன் Wireless LAN இனை உருவாக்க முடியும். அது மட்டுமல்லாது தனக்கே உரிய ஒரு முறையில் சூழ உள்ள வயர்லஸ் (Wireless) இனைப்புகளைக் கொண்ட ஒரு வலைப்பின்னலை இதனால் தானாக உருவாக்கிக்கொள்ள முடியும். இந்த முறை SD Card களுக்கு அன்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 802.llb/g/n எனும் தரக் கட்டுப்பாடுகளுக்கு அமைய நிறுவப்பட்டதாகும்.

அதாவது, இந்த SD Cardஆனது SDSC (Secure Digital High Density) வகையைச் சேர்ந்ததாகும். அத்தோடு இதன் கொள்ளலவு 32GB ஐ கொண்டிருக்கும். என்றாலும் இப்போதைக்கு சந்தையில் விடப்பட்டுள்ள SD Card ஆனது 8GB அளவு கொண்ட Flash Air கார்ட் ஆகும்.

இந்த Flash Air கார்ட்  மூலம் இன்னும் பல பயன்களும் உள்ளன. இந்த Flash Air கார்ட் இருக்கும் கெமரா ஒன்றில் உள்ள படங்களை சூழ உள்ள கணனி, செல் போன் போன்ற சாதன்ங்களுக்கு வயர்லஸ் (Wireless) முறையில் அனுப்பவும் முடிகிறது.

இதன் மூலம் வயர்லஸ் (Wireless) வலைப்பின்னல் உருவாக்க முடிவதோடு, சிரிய அளவிலான ஒரு பிரௌசர் (Browser) உம் இயக்கப் படுகிறது. அதாவது, அருகில் உள்ள ஒரு கணனியின் Web Browserல் http://flashair/ எனும் முகவரியை உள்ளிட்டதும் உங்கள் சாதனத்தில் உள்ள படங்கள் வீடியோக்களை அதில் காட்டும். ஒரு விதத்தில் இதை File Browser எனவும் கூற முடியும்.

Wifi-Flu-Cardகுறித்த ஒரு இடத்தில் இருந்து புகைப்படங்களை இன்னொரு கெமராவிற்கு என்றாலும் இம்முறை மூலம் அனுப்ப முடியும். இதன் மூலம் பயன் பெறக்கூடிய பல்வேறு முறைகளை மக்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்பது மட்டுன் நிச்சயம். டொஷிபா நிறுவனம் இது புகைப்படக் குழுக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்கிறது.

இதை ஒத்த ஒரு SD Card ஏற்கனவே ஐ பை (Eye-Fi) எனும் பெயரில் உள்ளது. என்றாலும் இந்த டொஷிபா Flash Air இல் உள்ளது போன்ற பயன்பாடுகள் இதில் இல்லை. ஐ பை (Eye-Fi) கார்டில் ஒரு தரவை கணனியில் பொருத்தப்பட்ட டிவைஸிற்கி வழங்குவதை மாத்திரமே செய்ய முடியும். அதே போல ஃப்லூ கார்ட் (Flucard) எனப்படும் இன்னொன்றும் உள்ளது. என்றாலும் இது வைபை (Wi-Fi) உள்ள இடங்களில் மாத்திரமே  இயங்கும்.

No comments:

Post a Comment

Pages