ஒரு Mouse இனால் பல கணனிகளைக் கட்டுப்படுத்தல்… - தமிழ் IT

Latest

Monday, December 3, 2012

ஒரு Mouse இனால் பல கணனிகளைக் கட்டுப்படுத்தல்…

mouse-without-border உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் கணனிகள் பல பயன்படுத்தப்படுகின்றனவா? அவை அனைத்திற்குமிடையே ஒருமித்து வேளை செய்ய வேண்டுமா? அவற்றுக்கிடையே இலகுவாக கோப்புகளைப் பரிமாற்றிக்கொள்ளா வேண்டுமா? சாதாரனமாக இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டால் இலகுவில் யாரும் சொல்லக்கூடிய பதில் Network ஒன்றை உருவாக்கினால் போச்சு என்பார்கள். என்றாலும் இந் நடைமுரை சற்று கடினமானது, அத்தோடு இதற்காக ஒவ்வொரு கணனிக்கும் வெவேறாக Mouse / Keyboard என்பன தேவைப்படுகின்றன. ஆனால் நாம் இங்கு பார்க்கப்போகும் முறை ஒறேயொரு Mouse இனாலும், ஒரேயொரு Keyboard இனாலும் பல கணகிகளைக் கட்டுப்படுத்தகூடிய ஒரு வழிமுறையாகும்.

மேலே சொன்னது போன்ற வேளைக்காக பொதுவாக கையாளப்படும் முறை “KVM Switch” எனும் கருவு ஆகும். “KVM Switch” எனும் இது ஒரு வகையில் Network Hub ஒன்றாகும். இதன் மூலம் குறித்த வலையமைப்பில் உள்ள அனைத்துக் கணனிகளையும் ஒரு Mouse இனாலும் Keyboard இனாலும் கையால முடியும். என்றாலும் இன்றைய காலப்பகுதியில் “KVM Switch” இனைப் பெற்றுக்கொள்வது சற்று சிறமமானதாகும். அத்தோடு சற்று விலையிலும் கூடிய ஒரு உபகரனமாகும். அத்தோடு “KVM Switch” மூலம் கணனிகளுக்கிடையில் தரவுகளைப் பரிமாற முடியாமை ஒரு குறையாக கொள்ளப்படுகிறது.

mouse-without-borders இவை அனைத்திற்கும் தீர்வாக இன்றைய காலத்தில் இருக்கும் ஒரு மென்பொருள் “Mouse Without Borders” ஆகும். இதனை தரவிரக்கிக்கொள்ள இங்கே கிலிக் செய்யுங்கள் . இது முறையாக இயங்குவதற்கு வலையமைப்பில் உள்ள கணனிகள் Network Router மூலம் இனைக்கப்பட்டிருத்தல் வேண்டும். Download செய்த Mouse Without Borders மென்பொருளை தேவையான அனைத்து கணனிகளிலும் நிருவிக்கொள்ள வேண்டும். Installation இன் முடிவில் உங்கள் கணனிக்குறிய Password உங்களுக்குக் காட்சிப்படுத்தப்படும். இனி தேவையான கணனியிலிருந்து உங்கள் அடுத்த கணனிகளின் Computer Name இனையும் அதற்காக Installation இன் முடிவில் காட்டப்பட்ட Password இனையும் கொடுத்து இனைத்துக்கொள்ளுங்கள்.

mousewithoutborders1 இனி என்ன, ராஜா மாதிரி ஒரே இடத்தில் இருந்து கொண்டு அனைத்து கணனிகளிலும் உங்கள் கைவரிசையைக் காட்டலாம். அது மட்டுமல்ல ஒரு கணனியிலிருந்து அடுத்த கணனிக்கு File களை Drag செய்து கொள்ளவும் முடியும். மேலும் எல்லா கணனிகளையும் ஒரேயடியாக Lock செய்தல், மற்றைய கணனிகளின் Screen Shot எடுத்தல் என பல வேளைகளை இதன் மூலம் செய்ய முடியும்.

இந்த Mouse Without Borders மென்பொருளை Microsoft நிருவனத்தி பனியாற்றும் Truong Do என்பவரே உருவாக்கியுள்ளர். இது Microsoft இனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மேலதிக மென்பொருளாக அடையாளப்படுத்தப் படுகிறது.

குறிப்பு: இந்த Mouse Without Borders மென்பொருளை பயன்படுத்த உங்கள் கணனிகளில் .NETframework  மென்பொருள்  நிருவப் பட்டிருத்தல் வேண்டும்.

No comments:

Post a Comment

Pages