மறைந்து போகும் தொழில் நுட்பங்கள் - தமிழ் IT

Latest

Thursday, July 17, 2014

மறைந்து போகும் தொழில் நுட்பங்கள்

E_1405250153 நம் உலகம் அதி வேகத்தில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஒரு காலத்தில் ஓஹோ என்று பேசப்பட்ட தொழில் நுட்பங்கள் இன்று மறைந்து வருகின்றன. எந்த மக்களாலும் பயன்படுத்தப்படுவதே இல்லை. இதே போல, இப்போது உள்ள சில தொழில் நுட்பங்களும் மறையும் வாய்ப்புகளை இப்போதே காட்டி வருகின்றன. இது குறித்து இங்கு பார்க்கலாம்.
ஒரு காலத்தில், வி.சி.டி. ப்ளேயர் ஒன்றினைச் சரியாக இயங்க வைத்து, அதன் காட்சியை இணைக்கப்பட்ட டிவியில் காட்டும் ஒருவர், பெரிய தொழில் நுட்பம் தெரிந்தவராக்க கருதப்பட்டார். தொடர்ந்து வி.சி.ஆர். வந்தது.
நாம் பார்க்காத சேனல், வி.சி.ஆரில் பதிந்து கிடைத்தது பெரிய அதிசயமாக்க் கருதப்பட்டது. 1980 ஆம் ஆண்டில், வினைல் இசைத் தட்டுக்கள் 15 ஆண்டுகளில், மொத்தமாக, வழக்கொழிந்து போகும் என யாராவது எண்ணி இருப்பார்களா? அதன் பின்னர், வந்த சிடிக்களும் காணாமல் போகும் என நினைத்துப் பார்த்திருப்பார்களா? ''மாற்றம் ஒன்றே மாறாதது'' என்ற கோட்பாட்டினை, இவை தொடர்ந்து உறுதிப்படுத்திக் கொண்டுள்ளன.இனி அடுத்து வழக்கொழிந்து போக இருப்பது, ஸ்மார்ட் போன் திரைகளே என சிலர் அடித்துச் சொல்கின்றனர். அணிந்து கொண்டு இயக்கப்படும் சாதனங்கள் தொடர்ந்து வரத் தொடங்கி உள்ளன.
ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட் க்ளாஸ் ஆகியவை டச் ஸ்கிரீன் திரைகள் கொண்ட ஸ்மார்ட் போனின் இடத்தைப் பிடிக்க இருக்கின்றன. இந்த 2014 ஆம் ஆண்டில், 1.9 கோடி என்ற எண்ணிக்கையை இந்த அணிந்து கொண்டு இயக்கப்படும் சாதனங்கள் எட்ட இருக்கின்றன. 2018ல் இவற்றின் எண்ணிக்கை 11.2 கோடியாக இருக்கும்.
ஆனால், அவை இன்றைக்குக் கிடைக்கும் அணியும் சாதனங்களாக இருக்காது. இவை மேலும் மேம்படுத்தப்பட்டு கூடுதல் வசதிகளுடனும், அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையாகவும் இருக்கும். உங்கள் சட்டையில் முதல் பட்டன், உங்களின் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் ட்ரைவிற்கான முகவாயிலாக இயக்கப்படும். கூகுள் கிளாஸ் தொடர்ந்து மேம்பாடு அடைந்து, எல்லாரும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் கிடைக்கும்.
அடுத்த நிலையாக, மனித உடலில் பதித்து இயக்கக் கூடிய RFID சிப்கள் வடிவமைக்கப்படும். இவற்றைப் பயன்படுத்தி, நம் வீட்டின் கதவுகளையும், கார் கதவுகளையும் திறக்கலாம். கண் பார்வையிலேயே இவை இயக்கப்படும். இன்னும் 20 ஆண்டுகளில், எந்த செயல் மனிதன் செய்யக் கூடியது, எந்த செயல் கம்ப்யூட்டர் செய்யக் கூடியது என்று வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாகிவிடும்.
இன்றைய சாதனங்களின் பயன்பாட்டில், பேட்டரிகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. ஆனால், அவை கையாள்வதற்குப அதிக எடை கொண்டனவாகவும், பெரியனவாகவும், சார்ஜ் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்பவையாகவும் உள்ளன. எனவே, பேட்டரிகளுக்கு மாற்றாக, சூப்பர் கெபாசிட்டர்கள் அல்லது எரிபொருள் கொண்ட செல்கள் (Fuel cells) பயன்பாட்டிற்குக் கிடைக்கும்.
மவுஸ் மற்றும் கீ போர்ட்கள் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும். குரல், கையசைவு, முக அசைவு, கண் அசைவு மற்றும் சில புதிய வகை கட்டளைகள் பயன்பாட்டில் இவற்றின் பயன்பாடு மாற்றிப் பெறப்படும். தொடு உணர் திரை கட்டளைகள் தொடரலாம். ஆனால், அவை ஆய்விற்கு கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவோர் மட்டுமே பயன்படுத்தப்படும் சாதனமாக இருக்கும்.
நம் இல்லங்களில் பயன்படுத்தப்படும் சாதனங்களில் அழுத்தி இயக்கப்படும் பட்டன்கள் மறைந்து கொண்டு வருகின்றன. ரிமோட் கட்டுப்பாடு சாதனங்கள் பலவகைகளில் வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இப்போதே, நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களே, அறைகளில் உள்ள மியூசிக் சாதனங்கள் மற்றும் பிறவற்றைக் கட்டுப்படுத்தும் சாதனங்களாக உருவெடுத்து வருகின்றன. மேலும் தொலைவில் இருந்து இயக்கும் இயக்கங்களும் இப்போதே கிடைக்கின்றன. தொலைந்து போகும் ஸ்மார்ட் போன்களின் இயக்கத்தினை முடக்கி வைக்கும் தொழில் நுட்பத்தினை இப்போது சர்வ சாதாரணமாக மக்கள் கையாள்கின்றனர். எதிர்காலத்தில், வாஷிங் மெஷின்களை, ஒரு தொழில் நுட்ப டெக்னீஷியன், அவர் அலுவலகத்தில் இருந்தவாறே சரி செய்திட முடியும்.
நாம் பயன்படுத்தப்படும் சாதனங்களின் கட்டுப்பாடு ஒரு நிறுவனத்தில் மையமாக இருக்கும். தனி மனிதர்களை நம்புவதைக் காட்டிலும் இந்த சாதனங்களையே நிர்வாகிகள் நம்புவார்கள். அல்லது நம்பிக்கை வைத்திட மறுப்பார்கள். குறிப்பிட்ட சாதனத்தின் ஆப்பரேட்டிங் சிஸ்டம், இருக்கும் இடம், நெட்வொர்க் அடிப்படையில், அதனை நிர்வாகிகள் நம்பத் தொடங்குவார்கள். அல்லது நம்பிக்கை இழப்பார்கள்.
அப்படியானால், இத்தனை விஷயங்களில் எது அதிக நாள் பயன்பாட்டில் இருக்கும்? இந்த கேள்விக்குப் பலரும் மின் அஞ்சல் தொழில் நுட்பத்தினையே சுட்டிக் காட்டுகின்றனர். இன்றைய சாப்ட்வேர் உலகில் வெகு நாள் வாழக் கூடிய கரப்பான் பூச்சியாக, மின் அஞ்சல் புரோகிராம்கள் இருக்கும். இந்த திட்ட அடிப்படை மாறாது. அஞ்சல்களை அணுகும் சாதனங்கள் வேண்டுமானால் மாறலாம். அணிந்து கொண்டு இயக்கும் சாதனங்களே, அஞ்சல் பார்த்துப் பதிலளிக்கும் சாதனங்களாக அமையலாம். மின் அஞ்சல் கட்டமைப்பு மட்டும் மாறாது. நம்மை விட்டுப் போகாது.

No comments:

Post a Comment

Pages