ட்வீட்டே செய்யாத ட்விட்டர் பயனாளிகள் 2.4 கோடி - தமிழ் IT

Latest

Friday, January 23, 2015

ட்வீட்டே செய்யாத ட்விட்டர் பயனாளிகள் 2.4 கோடி

twitter_2176659b உலகம் முழுவதும் உள்ள 28 கோடியே 40 லட்சம் டிவிட்டர் பயனாளிகளில், சுமார் 2 கோடியே 40 லட்சம் பேர் இதுவரை ஒரு முறை கூட ட்வீட் செய்ததே இல்லை என்கிறது, அந்த சமூக வலைதளம்.

அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தை ஆணையத்திடம் ட்விட்டர் நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில், இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான விரிவான செய்தியை 'வேல்யூவாக்' தளம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சுமார் 8.5 சதவீத ட்விட்டர் பயனாளிகள் ஒரு முறை கூட ட்விட்டர் சேவையைப் பயன்படுத்தாத 'ரோபோ' பயனாளிகள் எனத் தெரிய வந்துள்ளது.

அதேபோல், மொபைல் செயலிகள் மூலமாக இயங்கும் பயனாளிகள், ட்விட்டர் தளத்தில் கவனிக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பிளாட்ஃபார்மில் தவறானதும் போலிக் கணக்குகளும் அதிகப்படியாக உள்ளதாகவும், அதில் 5 சதவீதத்துக்கும் குறைவானவர்களே ஆக்டிவான பயனர்களாக இருப்பதாகவும் ஆய்வறிக்கை கூறுகிறது.

எனினும், இந்த மதிப்பீடு, மாதிரிக் கணக்குகளைக் கொண்டு எடுக்கப்பட்ட உள் ஆய்வுதான் என்றும், இதை அப்படியே கணக்கில் எடுத்துக் கொள்வது குறித்து முக்கியமான முடிவு எடுக்கவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆய்வறிக்கையின்படி, 28 கோடியே 40 லட்சம் பயனர்களில், 2 கோடியே 40 லட்சம் பேர் வெறும் செயலியையோ அல்லது மென்பொருளையோ ட்விட்டர் தளத்துடன் இணைக்கும் பாலமாக மட்டுமே இருக்கின்றனராம்.

மொத்தத்தில் 11 சதவீத ட்விட்டர் பயனாளிகள், மற்ற பிற மென்பொருள்களான டிவீட்டெக், ஹூட்சூட் மூலமாகவே ட்விட்டரில் உள் நுழைகின்றனர். இவர்களே அதிகமான ஆக்டிவ் பயனர்களாக இருக்கின்றனராம். இந்த 11 சதவீதத்தில் 8.5 சதவீதம்பேர்தான் எந்த ட்வீட்டும் செய்யவில்லை என்கிறது அந்த ஆய்வறிக்கை.

No comments:

Post a Comment

Pages