பேஸ்புக்கில் தனது புகைப்படத்தை தானே ‘லைக்’ செய்து மாட்டிக்கொண்ட குற்றவாளி

levi-charles

அமெரிக்காவின் காஸ்காதே நகரைச் சேர்ந்த 23 வயதான லெவி சார்ல்ஸ் ரியர்டன் வழிப்பறி, திருட்டு என தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்.

எனினும், அவர் பொலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாக சுற்றிக்கொண்டிருந்தார்.

எனவே, இவரைத் தேடப்படும் குற்றவாளி என அறிவித்து, இதற்கென உள்ள பிரத்தியேக பேஸ்புக் பக்கத்தில் லெவி சார்ல்ஸின் குற்ற விபரங்கள், புகைப்படம் மற்றும் அங்க அடையாளத்தை பொலிஸார் வெளியிட்டனர்.

இந்தப் பக்கத்தை பொதுமக்கள் பார்த்து குற்றவாளியைப் பிடிக்க உதவுவார்கள் என நினைத்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

குற்றவாளியான லெவி சார்ல்ஸே குறும்பாக பொலிஸ் வெளியிட்ட தனது புகைப்படத்தை லைக் செய்தார்.

இதை சற்றும் ஏதிர்பாராத பொலிஸார் உடனடியாக அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர்.

கைது செய்ததும் பொலிஸாருக்கு சிரிப்பதா அல்லது கோவப்படுவதா எனத் தெரியாமல் அவனை தடுப்புக்காவலில் வைத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.