யாகூவை வாங்கிய வெரைஸன்… - தமிழ் IT

Latest

Sunday, July 24, 2016

 யாகூவை வாங்கிய வெரைஸன்…

VERIZON-YAHOO/அலைபேசி ஜாம்பவானான வெரைஸன், இணையத்தில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தும் முகமாக, யாகூ நிறுவனத்தின் பிரதான இணைய சொத்துக்களை, 4.83 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு வாங்கவுள்ளதாக வெரைஸன் தொலைத்தொடர்புகள் நிறுவனம் திங்கட்கிழமை (25) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தான் கடந்த வருடம், 4.4 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு வாங்கிய ஏ.ஓ.எல் பிரிவுடன், யாகூவின் தேடல், மின்னஞ்சல், மெசஞ்சர், விளம்பரத் தொழில்நுட்ப கருவிகளை வெரைஸன் இணைக்கவுள்ளது. நிரம்பியுள்ள கம்பியற்ற சந்தைக்கு வெளியே, அலைபேசி காணொளி மற்றும் விளம்பரத்தில் புதிய மூலங்களில் வருமானத்தை ஈட்டுவதற்கு வெரைஸன் எதிர்பார்த்திருந்த நிலையிலேயே, தற்போது யாகூவை வெரைஸன் வாங்கியுள்ளது.

1994ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யாகூ, இணையத்தின் ஆரம்ப நாட்களில் ஆதிக்கம் செலுத்தியிருந்த போதும், பிணைய நாட்களில், தனது ஆதிக்கத்தை, தற்போதைய அல்பபெட் நிறுவனத்தின் கூகுள், பேஸ்புக் நிறுவனம் மற்றும் ஏனைய நிறுவனங்களிடம் இழந்திருந்தது.

எவ்வாறெனினும், 2000ஆம் ஆண்டு, .com பாய்ச்சல் நிகழ்த்தப்பட்டபோது, 125 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதி வாய்ந்ததாக இருந்த யாகூ, 2008ஆம் ஆண்டு, 44.6 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மைக்ரோசொஃப்டினால் வாங்கப்படுவதை நிராகரித்திருந்த நிலையில், தற்போது, 4.83 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு வாங்கப்படுவதானது, இணையத்தை ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்துபவர்களுக்கு வருத்தமான செய்தியே ஆகும்.

No comments:

Post a Comment

Pages