G Board தமிழ் மற்றும் சிங்கள் மொழியில் பேசுவதை Type செய்கிறது - தமிழ் IT

Tuesday, August 15, 2017

demo-image

G Board தமிழ் மற்றும் சிங்கள் மொழியில் பேசுவதை Type செய்கிறது

gboard_android1

காலத்துக்குக் காலம் தனது வாடிக்கையாளர்களை ஆச்சரியப் படுத்துவதில் Google இற்கு தனி இடம் இருக்கிறது. புதிய சேவைகள், புதிய வசதிகள் என தனது வாடிக்கையாளர்கள் எதிர் பாராதவற்றை எதிர்பாராத நேரங்களில் வழங்குகிறது. கூகுலின் சில சேவைகள் எதிர்பார்த்த அளவு வாடிக்கையாளர்கள் மத்தியில் எடுபடா விட்டாலும், பெரும்பாலான சேவைகள் பெரும் வரவேற்பை பெற்றவை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அந்த வகையில் அன்மையில் கூகுல் Android சாதனங்களுக்காக வழங்கி வந்த Google Keyboard என்பதை G Board என பெயரை மாற்றையது மட்டுமல்லாமல், அதன் வடிவமைப்பு, இயல்புகள் என்பவற்றிலும் பல அருமையான மாற்றங்களை கொண்டுவந்து iOS இற்கும் ஒரு பதிப்பை வெளியிட்டது. முன்னர் வேறுபட்ட மொழிகளுக்காக வெவ்வேறான Keyboard கள் பயன்படுத்த வேண்டியிருத்தது. அதனை மாற்றி ஒரே G Board இல் தேவையான அனைத்து மொழிகளையும் இணைத்துக்கொள்ளவும், வேறுபட்ட Layout களில் Type செய்யவும் வசதியளித்தது. அதற்கு மேலதிகமாக மேலும் பல நுட்பங்களையும் இணைத்திருந்தது.

இந்த வரிசையில் Google அதன் G Board இல் இணைத்துள்ள வசதிகளில் ஒன்றான Voice Typing எனும் நாம் பேசும் பேச்சை Type செய்யும் வசதி ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளுக்கே இதுவரை இருந்தது. தற்போது இந்த வசதி தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலும் செயற்படுத்த முடிகிறது. இரண்டு மொழிகளிலும் மிக அருமையான முறையின் இவ் வசதி செயற்படுகிறது. 

WhatsApp+Image+2017-08-15+at+10.35.46+PM+%25281%2529WhatsApp+Image+2017-08-15+at+10.35.46+PM


இனி என்ன Type செய்ய சோம்பல் என்று சொல்ல முடியாது, தட்டியனுப்ப வேண்டியதில்லை சொல்லியனுப்பினால் போதும்....

app-store-android-downloadgetOnIOS 

No comments:

Post a Comment

Pages

Contact Form

Name

Email *

Message *