சிங்கள் Voice Typing இல் G Board உடன் போட்டி போடும் ஹெலகுரு (Helakuru) - தமிழ் IT

Tuesday, August 22, 2017

demo-image

சிங்கள் Voice Typing இல் G Board உடன் போட்டி போடும் ஹெலகுரு (Helakuru)

20900539_1377456988969768_3433262379464149502_o-700x350

Android சாதனங்களில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் சாதனை புரிந்துகொண்டிருந்தாலும் எமது சகோதர மொழியான சிங்கள மொழிக்கான பங்கு மிகவும் குறைவாகவே ஆரம்பத்தில் காணப்பட்டது. இதற்கு பல காரனங்கள் இருக்கலாம், முக்கியமாக தமிழ் மொழி பரவலாக பல நாடுகளில் உள்ளதோடு, இந்தியர்கள் தகவல் தொழிநுட்ப துரையில் பல முன்னணி நிருவனங்களில் முக்கிய இடங்கலில் இருப்பதாலும் தமிழ் இத் துறையில் சர்வசாதாரனமாகி விட்டது, என்றாலும் பெரும்பாலும் இலங்கையில் மாத்திரமே சிங்கள மொழி உபயோகிக்கப்படுவடதாலும், இலங்கை ஆரம்பத்தில் தகவல் தொழிநுட்ப துறையில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றமடைந்திராததாலுன் சிங்கள மொழி பயன்பாடு சற்று குறைவாகவே கானப்பட்டது. முக்கியமாக Android இல் மிகவும் குறைவாகவே கானப்பட்டது.

என்றாலும் இந்த குறைகளை தாண்டி Android இல் சிங்கள மொழியை சாத்தியப் படுத்தி சாதனை படைத்த பெருமை Bhasha  நிறுவனத்தை சாரும், அதிலும் Bhasha நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Android சாதனங்களுக்கான Helakuru Keyboard இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இலங்கைக்கே உரிய தோரனையில் பல்வேறுபட்ட Android செயலிகளை வெளியிட்டு பல சாதனைகளை இந்த Bhasha நிறுவனம் செய்துள்ளது.

முக்குயமாக கடந்த வாரம் Google நிறுவனம் தனது Android Keyboard செயலியான G Board இற்காக வெளியிட்ட Voice Typing சிங்கள, தமிழ் மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது நாம் அறிந்ததே. அந்த வசதியை தனது Helakuru  Keyboard இல் Google வெளியிட்டு மூன்று நாட்களின் Helakuru அறிமுகம் செய்தது பாராட்டத்தக்கதே.

G Board இனால் உச்சரிப்புக்களை சரியாக உணர முடியாத கடினமான வார்த்தை உச்சரிப்புக்களையும் மிகச் சரியாக Type செய்யும் ஆற்றலுடன் Helakuru கானப்படுவது அவர்களின் திறமைகளை எடுத்துக் காட்டுவதாகவே உள்ளது.

Helakuru இன்னும் பல சாதனைகளை செய்யும் என எதிர்பார்க்கலாம்.
en_badge_web_generic

No comments:

Post a Comment

Pages

Contact Form

Name

Email *

Message *