Page Adminகளுக்கு ஷாக் கொடுத்த Facebook - தமிழ் IT

Latest

Thursday, October 19, 2017

Page Adminகளுக்கு ஷாக் கொடுத்த Facebook


இன்றைய இளைஞர்கள் மட்டுமன்றி அனைத்துத் தரப்பினரையும் கட்டிப் போட்டுள்ள Facebook காலத்திற்கு காலம் புதிய வசதிகளை அறிமுகம் செய்து பயனர்களை கட்டிப்போட்டுள்ளது என்றால் மிகையாகாது.

அவ்வப்போது வரும் புதிய வசதிகள் பெரிதும் வரவேற்பைப் பெற்றது போல சில விடயங்கள் எரிச்சலையும் கொடுத்தது என்றால் தவறில்லை என நினைக்கிறேன். இன்னும் சில ஒரு தரப்பின் வரவேற்பையும் இன்னொரு தரப்பின் எரிச்சலையும் கூட்டியது எனவும் கூறலாம்.

சரி நாம் விடயத்துக்கு வருவோம், அதவது Facebook இன்றிலிருந்து அறிமுகம் செய்யும் புதிய அமசம் தான் Explore Feed இது என்ன என்று பார்கிறீர்களா. பெரும்பாலும் இன்று Facebook பயன்படுத்தியவர்களுக்கு ஒரு வித்தியாசம் புரிந்திருக்கும். அதாவது, நாம் முதலில் உற்சென்றதும் நமது கணக்குக்குள் சென்றதும் நமக்கு தோன்றுவது நமது News Feed / Wall. இதில் நமது நன்பர்களின் பதிவுகள், நாம் Like செய்த Page களின் பதிவுகள் என்பன காட்சிப்படுத்தப்படும். இது சிலவேலை பலருக்கு எரிச்சலை கொடுத்திருக்கும்.

ஆனால் இனி அந்த தொல்லை இல்லை,  News Feed இல் உங்கள் நன்பர்களின் பதிவுகளும், Explore Feed இல் நீங்கள்  Like செய்த Page களின் பதிவுகளும் வேறாக காட்சிப்படுத்தப்படும். இதனால் பல Page கள் அட்டகாசம் ஓரளவு அடங்கும் எனலாம். என்றாலும் இது Facebook Page களை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் விரும்பியவர்கள் Explore Feed இல் சென்று நீங்கள்  Like செய்த Page களின் பதிவுளை பார்க்களாம்.  இதனால் அனைவரும் Explore Feed இல் சென்று பதிவுகளை பார்ப்பார்களா என்பது கேள்வியே.

அப்படி இது பாதிப்பை ஏற்படுத்துமானால் அது Facebook வருமானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். என்றாலும், இவ்வாறு தனக்கு பாதகமான ஒரு அம்சத்தை Facebook உற்சேர்க்குமானால் அதற்கான ஏதேனும் மாற்று திட்டத்தையும் வைத்திருக்கும் என நம்பலாம்.

No comments:

Post a Comment

Pages