போக்குவரத்துத் துறையில் பாரிய புரட்சிகளை செய்த ஒரு App என்றால் அது Google Map என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். தெரியாதைடங்களுக்கெல்லேம் எல்லாம் தெரிந்தவரைப்போல Google Map துனையுடன் போய் வந்தோர் நம்மில் பலர். காலப்போக்கில் சாஅரதிகளுக்கு மிக பயனுள்ள ஒரு ஆப் ஆக இது மாரியது என்றால் மிகையில்லை. இந்த Google Map ஐ அடிப்படையாகக் கொண்டே ஏராலமான போக்குவரத்து சார்ந்த App கள் உருவாகின. Ola, Uber, PickMe, DropMe, SLT Wave என உள்நாட்டு வெளிநாட்டு போக்குவரத்து சேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இதே கூகில் மேப் காலப் போக்கில் Traffic, Location Sharing, PickUp, Driving என பல சேவைகளை அடுக்கிக்கொண்டே போனது. அவ்வாறான சேவைகளில் ஒன்று தான் Transit சேவை. அதாவது, பொதுப் போக்குவரத்து சேவைகளை உள்வாங்கி அதன் மூலம் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்கு செல்வதற்கான பொதுப் போக்குவரத்து சேவைகலின் விபரத்தை வழங்குவதோடு, குறித்த வாகனம் எந்த இடத்தில் இப்போது உள்ளது போன்ற தகவல்களை பாயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும். என்றாலும் இவ் வசதி எல்லா நாடுகளுக்கும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கவில்லை. ஏனென்றால் அது குறித்த நாட்டின் அரசின் பங்களிப்போடு செய்யப்பட வேண்டிய ஒரு வேளை. இச் சேவை இதுவரை இலங்கையிலும் இல்லாமல் இருந்தது.
இன்றைய தினம் இலங்கை இச் சேவையில் இனைந்துகொள்வதற்காகன முதல் காலடியை வைத்து. அதாவது இன்று தேசிய போக்குவரத்து ஆணையத்தின் 25 வது ஆண்டு நிறைவுக்கு விழா போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுனா ரனதுங்க தலைமையில் இடம்பெற்ற போது, Transit சேவைக்கு தேவையான தரவுகளை உத்தியோகபூர்வமாக Google நிறுவனத்திற்கு வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
ஆம் எனவே மிக விரைவில் இலங்கையிலும் Google Transit சேவையை அனுபவிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவுள்ளது. ஆரம்பத்தில் எந்த அளவுக்கு இச்சேவை திருப்திகரமானதாக இருக்கும் என்பது கேள்வியாக இருந்தாலும், காலப்போக்கில் சிறந்த சேவையை இலங்கை பயனர்களுக்கு வழங்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது.
No comments:
Post a Comment