Facebook இன் பெயர் மாற்றமும் Meta வின் பின்னணியும்.. - தமிழ் IT

Latest

Friday, November 5, 2021

Facebook இன் பெயர் மாற்றமும் Meta வின் பின்னணியும்..

 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் Facebook நிறுவனத்தின் பெயர் Meta என மாற்றப்பட்ட செய்தியை சமூக ஊடகங்களும், ஏனைய ஊடகங்களும் மிகுந்த முக்கியத்துவத்துடன் பேசியது. என்றாலும் அற்றில் பெரும்பாலானவை வெறுமனே ஒரு முன்னணி நிறுவனத்தின் பெயர்மாற்றத்தை மட்டுமே செய்தியாக பேசியது.

இந்த பெயர் மாற்றத்திற்கு இரண்டு முக்கிய விடயங்கள் காரணிகளாக அமைந்தது.

  1. Facebook ஒரு கூட்டு நிறுவனமான மாற்றம் பெற்றிருந்தமை
  2. எதிர்கால தொழிநுட்பத்தை இலக்காக கொண்ட நகர்வு

01 Facebook ஒரு கூட்டு நிறுவனமான மாற்றம் பெற்றிருந்தமை

ஆரம்பத்திலிருந்து Facebook சேவையை மாத்திரம் வழங்கி வந்த நிறுவனம், காலப்போக்கில் வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் என்ன வேவ் வேறு நிறுவனங்களை தன்னோடு சேர்த்துக் கொண்டது.  பல பிராண்டுகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு நிறுவனத்திற்கு ஒரு பிராண்டின் பெயரை நிறுவனப் பெயராக பயன்படுத்துவது பொருத்தமற்ற தாகவே நீண்ட நாட்களாக கருதப்பட்டு வந்தது.

கூகுள் நிறுவனப் பெயர் காலப்போக்கில் வெவ்வேறான சேவைகளுடன் அல்ஃபபெட் என்ற பெயரில் மாற்றம் பெற்ற பின்னணியை இது ஒத்திருக்கின்றது.

இந்த வகையில் ஃபேஸ்புக் என்று இருந்த தாய் நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட வேண்டியது காலத்தின் தேவையாகவும் இருந்தது.

02 எதிர்கால தொழிநுட்பத்தை இலக்காக கொண்ட நகர்வு

Microsoft, Google நிறுவனங்களைப் போன்று Facebookம் நீண்டகாலமாக புதிய விடயங்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வந்தது. அக்யூலர்ஸ் oculus VR Game, தனக்கான கிரிப்டோ கரென்ஸி என வித்தியாச வித்தியாசமான பகுதிகளில் தனது முயற்சிகளை ஆரம்பித்தது. இவை அனைத்தும் எதிர்காலத் தொழில்நுட்பம் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டதாகவே கருதப்பட்டன. எனவே மாற்றப்படும் பெயர் இவற்றுக்கும் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்பதில் ஃபேஸ்புக் கரிசனை காட்டியது. இந்த வகையில் தான் நிறுவனத்தின் பெயர் மேட்டா (Meta) என மாற்றியது. இந்த Meta என்ற பெயருக்கு ஒரு பெரிய பின்னணியும் இருக்கின்றது. அது பற்றி அடுத்து பார்ப்போம்.

Meta என்றால் என்ன?

Meta என்பது ஒரு கிரேக்க மொழிச் சொல்லாகும், அதற்கான பொருள்  “மறைக்கப்பட்ட” அல்லது “வெளியில் தெரியாத” என்பதாகும். இச் சொல்லை மூலமாக கொண்டே metaverse என்ற சொல் அறிமுகமானது. metaverse எனப்படுவது மெய்நிகர் உலகம் அல்லது வேர்சுவல் உலகம் எனலாம். தற்போதைய உலகில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக உலகில் எங்கேயோ உள்ள ஒருவரை கூடதொடர்பு கொள்ள முடிகிறது நேரில் கண்டிராத ஒருவரைக்கூட சமூகவலைதளங்கள் மூலம் நண்பர்களாக்கிக் கொள்ள முடிகிறது. அப்படி இந்த இணையதளத்தின் அடுத்த கட்டம்தான் metaverse. அதாவது Metauniverse என்ற வார்த்தைகளை இணைத்து உருவானது தான் Metaverse.

இன்னொரு வகையில் சொல்வதானால் நம் வாழும் இந்த பிரபஞ்சத்தை யுனிவேர்ஸ் (Universe) என்று நாம் அழைப்பது போல நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நிஜ உலகத்திற்கு அப்பால் இருக்கும் டிஜிட்டல் அல்லது மெய்நிகர் உலகு(Virtual Reality World) என்பதுதான் இதன் அர்த்தம்.


 
Metaverse இன் தோற்றம்

முதன்முதலில் 1992ஆம் ஆண்டு நீல் ஸ்டிபன்சென் என்ற எழுத்தாளரின் Snow Crush என்று அறிவியல் புனைக் கதையில் வெளியானது அந்த கதையில் மக்கள் தங்களுக்கென ஒரு உலகத்தையே உருவாக்கி செயற்கையாக ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ளும் மெய்நிகர் உலகம் பற்றி சொல்லப்படுகிறது, அந்த மெய்நிகர் உலகம் தான் இந்த METAVERSE என அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த Metaverse அடிப்படையில் உருவான மற்றொரு நாவல்தான் ரெடி பிளையேர் வன் (Ready Player One) இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இதனை 2018 ஆம் ஆண்டு திரைப்படமாக வெளியிட்டிருந்தார். தற்போது இளைஞர்கள் விளையாடக்கூடிய Fortnite வீடியோகேம் கூட இந்த Metaverse அடிப்படையில் உருவானவையே. நாம் தற்போது இருக்கும் சூழலை கற்பனை சூழலாக மாற்றும் AGUMETED REALITY அந்த கற்பனை சூழலில் நாமே இருப்பதாக உணரச்செய்யும் VIRTUAL REALITY இந்த இரண்டையும் இணைத்து நிஜ உலக மனிதர்களை Virtual ஆக வாழச் செய்யும் இடம் தான் metaverse.

Metaverse Games

VR விளையாட்டுகளில் மட்டும் பயன்படுத்தப்படும் இந்த தொழில்நுட்பம் இனி மக்களை தங்களுக்குப் பிடித்தமான தோற்றம் போன்ற அவதார்களை உருக்களை உருவாக்கி மெய்நிகர்உலகில் தனது தேவைகளை செய்துகொள்ளும் விதத்தில் வாழ செய்யப்போகிறது. இப்படிச் சொல்லும் போது Avatar  திரைப்படம் பலருக்கு நினைவில் வரலாம். ஆம் அத்தகைய ஒரு நிகழ்வுதான் இங்கும் நடக்கப்போகிறது. இங்கு Crypto Currency களை வாங்கி இந்த Metaverse ல் நமக்கு பிடித்தமான சூழலை உருவாக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஃபேஸ்புக் பெயர் மாற்றம்



பேஸ்புக் நிறுவனம் இந்த Metaverse இல் தான் அதிகம் கவனம் செலுத்துகிறது Facebook, Instagram, WhatsApp  மற்றும் வேர்ச்சுவல் விளையாட்டுத்தளமான ஆக்குளஸ் (oculus) ஆகியவற்றை Metaverse மூலம் இணைத்து Meta வின் கீழ் கொண்டு வருவது ஃபேஸ்புக்கின் திட்டம் என கூறப்படுகிறது. இது நடைமுறையில் வர 10 - 15 வருடங்கள் வரை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது, என்றாலும் இப்போது பேஸ்புக் மூலம் நாம் இதுவரை நேரில் கண்டிராத பல நபர்களுடன் நட்பு பாராட்டுகிறோம்.இந்த தொழில்நுட்பம் சாத்தியபடும்போது மெய்நிகர் உலகில் அவர்களோடு நாம் விளையாடலாம், அரட்டையடிக்கலாம், நடைபயிற்சி செய்யலாம் என பல்வேறு அம்சங்கள் உள்ளது.இதற்கு போதுமான விளக்கத்தை ஃபேஸ்புக் வெளியிட்ட Meta தொடர்பான மார்க் ஸகர்பர்கின் அறிமுக வீடியோவில் பார்க்கலாம்.


வணிக ரீதியாகவும், தொழிநுட்ப ரீதியாகவும் இது மிகப் பிரமாண்டமான சாதனை என்றாலும்.ஏற்கனவே, மொபைலிலும், தொழிநுட்ப சாதனங்களிலும், ஒன்லைன் கேம்களிலும் மூழ்கியுள்ள இன்றைய இளைஞர் சமூகத்தை இந்த தொழிநுட்பம் எங்கு கொண்டு விடப்போகிறதோ தெரியவில்லை. மேலும் இங்கு பாரிய Privacy சவால்களும் இல்லாமல் இல்லை.

காத்திருப்பதை விட நமக்கு வேறு என்ன உள்ளது? காத்திருப்போம்..


No comments:

Post a Comment

Pages