2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமூக வலைத்தளங்கள் பயன்பாட்டுக்கு வரி விதிக்கும் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் இச்சட்டம் அமுலானது.
உகாண்டா நாட்டில் விதிக்கப்பட்ட சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான வரியால் சுமார் 30 லட்சம் பேர் இன்டர்நெட் பயன்பாட்டை கைவிட்டுள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமூக வலைத்தளங்கள் பயன்பாட்டுக்கு வரி விதிக்கும் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் இச்சட்டம் அமலானது.
இச்சட்டத்தின் படி, வாட்ஸ்ஆப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வரி விதிக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு பெரிய வருவாய் கிடைக்கும் என எதிர்பார்த்த அந்நாட்டு அரசு ஏமாற்றம் அடைந்துள்ளது.
உகாண்டா அரசு வெளியிட்டுள்ள சமூக வலைத்தள வரி தொடர்பான புள்ளிவிவரத்தில் மூன்று மாதங்களில் 30 லட்சம் பேர் இன்டர்நெட் பயன்பாட்டையே விட்டுவிட்டார்கள் எனத் தெரிந்துள்ளது.
ஜூலை 2018 முதல் செப்டம்பர் 2018 வரை உள்ள இந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் ஜூலையில் 1,60,98,825 பேர் இன்டர்நெட் பயன்படுத்தியுள்ளனர். இதுவே செப்டம்பரில் 1,35,79,150 ஆக குறைந்துள்ளது.
வரி விதிப்பின் தொடக்கத்தில் அந்நாட்டுக்கு இதன் வாயிலாக கிடைத்த வருவாயும் குறைந்துள்ளது. வரி விதிப்புக்கு முன் சமூக வலைத்தளங்களை பயன்படுத்திக்கொண்டிருந்தவர்களில் பாதி பேர்தான் வரி செலுத்தி தொடர்ந்து அந்த வசதியை பயன்படுத்துகிறார்கள்.
No comments:
Post a Comment