பேஸ் புக் (Facebook) மாயை ஒரு மன நோயாம்… - தமிழ் IT

Latest

Tuesday, February 8, 2011

பேஸ் புக் (Facebook) மாயை ஒரு மன நோயாம்…


பேஸ் புக் (Facebook) பாவனையானது ஒருவகை பித்தாக மாறிவிட்டதாக உலகின் முன்னணி சமூக ஆய்வு அமைப்புகள் கூறுகின்றன. இது பற்றி முதலில் ஆய்வினை மேற்கொண்டது அமேரிக்காவின் ஒக்சிஜன் மீடியா (Oxygen Media) எனும் அமைப்பகும். இவர்களின் ஆய்வின் அடிப்படையில் பேஸ் புக் (Facebook) தளத்திற்கு வருகை தரும் பாவனையாளர்களில் அதிகமானோர் பென்கள் ஆவர். இவர்கள் 18 முதல் 34 வயதுக்கு உற்பட்டவர்களாகக் கானப்படுகின்றனர். இங்கு பென்களின் விகிதமானது 57% ஆக கணக்கிடப்பட்டுள்ளதுடன், இவர்கள் அன்றாடம் தமது சாதாரன நன்பர்களை சந்தித்து நேருக்கு நேர் பேசிப் பழகுவதை விட பேஸ் புக் (Facebook) ஊடாக நன்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆய்வில் பங்குகொண்ட பெண்களில் 39 விகிதத்தினட் தாம் பேஸ் புக் (Facebook) இற்கு அடிமையாகி விட்டதாகவே கூறியுள்ளனர். காலையில் எழுந்தவுடன் பல் கூட துலக்காமல் பேஸ் புக் (Facebook) தளத்திற்கு சென்று நன்பர்களின் புதிய பதிவுகளை (Updates) பார்வையிட்டு அவற்றுக்கு பதில் (Comment) எழுதும் இவர்கள் பெரும்பாலும், முன்னைய தினம் நடுநிசியிலும் பேஸ் புக் (Facebook) இற்கு சென்றவர்களாவர்.

இவ்வாறு பேஸ் புக் (Facebook) இற்கு அடிமையாதல் ஒரு மன நோயா என இன்னும் சரியான தீர்மானமொன்று இல்லை. என்றாலும் இப்போதே இந்த அடிமையாதலுக்கு பேஸ்புக் எடிக்ஷன் டிஸோடர் (Facebook Addiction Disorder) என்ற விஞ்ஞான ரீதியான பெயர்தாங்கிய ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை சான்றோர் பலரும் மண நோயாகவே குறிப்பிடுகின்றனர். இது பென்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரும் வயது வித்தியாசமின்றி அடிமையாகியுள்ள ஒரு நோயாகவே கணிக்கப்படுகிறது.

இப்போதைக்கு பேஸ் புக் (Facebook) தளத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் பாவனையாளர்களின் எண்ணிக்கை 55 கோடி (550 மில்லியன்)கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கையானது தினம் தோரும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்போதைய கணிப்பின் அடிப்படையில் தினமும் பேஸ் புக் (Facebook) இல் இனையும் புதிய பாவனையாளர்களின் என்னிக்கை ஏழு இலட்சமாக காணக்கிடப்பட்டுள்ளது. இவ்வறு சென்றால் 2012 ஆம் ஆண்டின் கடைசிப் பகுதியில் பேஸ் புக் (Facebook)இன் பாவனையாளர்களின் என்னிக்கை 100கோடி (ஒரு பில்லியன்) ஆகிவிடும்.

பேஸ் புக் (Facebook) கணக்கு வைத்திருக்கும் 55 கோடிப் பேரில் 30 கோடிப்பேர் தினமும் இத்தளத்திற்கு வந்து செல்கிறார்கள் என்பதோடு குறைந்தது ஒர் மனித்தியாளமாவது பேஸ் புக் (Facebook) உடன் செலவிடுகின்றனர். இவ்வாறு செலவிடுதல் இதற்கு அடிமையாதல் என்று எவரும் கருதுவதில்லை. என்றாலும் இதற்காக ஒசெலவிடப்படும் நேரம் எவ்வாறு ஒதுக்கப்படுகிறது என்பதை வைத்து இதனை முடிவு செய்யலாம் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகும்.

பேஸ் புக் (Facebook)இற்கு செலவிடும் ஒரு மனித்தியாலமானது பெறப்படுவது தனது தொழிலுக்கு செலவிடும் நேரத்தில் இருத்து என்றால் அது அடிமையாதலுக்கு ஒத்ததாகும், அன்றாடம் செய்ய வேண்டிய வேளைகளை ஒருபுறம் வைத்துவிட்டு பேஸ் புக் (Facebook)உடன் ஒட்டிக்கொண்டிருந்தால் அது ஒரு மனித்தியாளத்திற்கு குறைந்த நேரம்மானாலும் அடிமையாதலாகவே கொள்ளப்படல் வேண்டும்.

இங்கு சமூக ஆய்வாளர்கள் அனைவரும் பொதுவாகக் கூறும் ஆலோசனை யாதெனில், சமூக வளைப்பின்னல்கள் சிறந்தவை தான். என்றாலும் ஏனைய அனைத்து வேளைகளையும் விடவும் அல்ல. அதை வாழ்வின் வினோத பொழுது போக்குகளில் ஒன்றாகக் கருதி இயங்க ஆரம்பித்தால் பேஸ் புக் (Facebook) உன்மையிலேயே ஒரு சிறந்த சமூக வளையாகும். அப்போது அது ஒரு மன நோயாக மாறாது.

No comments:

Post a Comment

Pages