Windows 8 கசிந்தசில தகவல்கள்.. - தமிழ் IT

Latest

Monday, February 7, 2011

Windows 8 கசிந்தசில தகவல்கள்..


உலகலாவியரீதியில் மிகவும் அதிகமாக பாவிக்கப்படும் இயங்குதளம் (Operating System) Windows இயங்குதளம் என்றால் மிகையாகாது, Windows இன் ஒவ்வொரு நகர்வையும் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து நிற்கின்றனர். எப்போதும் மாபெரும் எதிர்பார்புகளை தாங்கியதாகவே windows பதிப்புகள் வெளியாகின்றன. அந்த எதிர்பார்ப்புகள் சில வேளைகளில் தோள்வியிலும் முடிந்துள்ளன என்பதற்கு Windows Vista சிறந்த உதாரணமாகக் உள்ளது.
Windows Vistaவின் குறைகளை எல்லாம் நிவர்த்தி செய்து, இன்னும் ஏராலமான புதிய அமசங்களுடன் வெளிவந்த Windows பதிப்பே Windows 7. உண்மையிலேயே ஒரு பாரிய சாதனை என்றும் கூற முடியும். Windows 7 வெளியானதில் இருந்து மக்களின் அடித்த கேள்வி ஆரம்பமானது. அது தான் அடுத்த Windows பதிப்பு என்ன? என்ற கேள்வி. நீண்ட காலமாக இந்தக் கேள்வி நிலவ வந்தது, அதற்கு சில பதில்களும் கிடைக்கப் பெற்றன. என்றாலும் அவற்றின் உண்மை நிலை கேள்விக்குறியாகவே இருந்த்து வந்தது. இவற்றுக்கெள்ளாம் ஒரு சிறந்த சற்று நம்பகமான் ஒரு பதில் அன்மையில் கிடைத்தது.
கடந்த ஜனவர் 5 ஆம் தேதி நடைபெற்ற CES (Consumer Electrical Show) கண்காட்சி அமரிக்கவில் நடை பெற்றது. இதில் பிரதான உரையாற்றியவர் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் பிரதான நிருவாக அலுவளர் ஸ்டீவ் பெல்மர். இந்த உரை ஆரம்பிக்க முன்னரே அனைவரினதும் கவனமும் இவ்வுரையை எதிர்பார்த்திருந்தனர். ஏனெனில் இது தான் Windows இன் அடுத்த பதிப்பு பற்றிய தகவல்கள் நம்பகமாக வெளியாக் உள்ள சிறந்த சந்தர்ப்பம் என்பதனால் ஆகும். என்றாலும் ஸ்டீவ் பெல்மரின் உரை அனைவரினதும் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. அவர் ஒரு சில தகவல்களை மாத்திரமே இங்கு பகிர்ந்துகொண்டார்.
அதில் அடுத்த பதிப்பிற்காக விஷேடமான் மைக்ரோ சிப் கள் தேவைப்படும் என்றும் தற்போதைய வெளியீடுகளில் இருந்தும் முற்றிலும் வித்தியாசமான் தோற்றத்தில் (GUI) இல் வெளியாகும் போன்ற தகவல்களே இங்கு பேசப்பட்டன.
இவற்றுக்கு மேலாக மைக்ரோசொப்டின் Windows இயங்குதள் நிர்மான பங்காளிகளிடமிருந்து சில தகவல்கள் வெளியாகி உள்ளன, அதில் windows8italia இனையத்தளத்தில் வெளியான சில நம்பகமான் உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன்.
இப்போதைக்கு Windows 8 என்பதற்குப் பதிலாக Wind என்ற பெயரே வளங்கப்பட்டுள்ளது, இது 64 Bit கணனிகளிலேயே பயன்படுத்த முடிவதோடு குறைந்தது 170MB Graphical Memory (VGA) இருத்தல் வேண்டும். இவற்றை விட இதன் Graphical User Interface (GUI) ஆனது Windows 7 இல் இருக்கும் Aero Interface இன் ஒரு புதிய பாய்ச்சலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
Windows 7 ஆனது 32Bit மற்றும் 64Bit ஆக வெளியானது போல Windows 8 ஆனது 64 Bit மற்றும் 128Bit இயங்குதளமாகவே வெளிவரும். அத்தோடு அனைத்து வகை கணனிகளுக்கும் பொருந்தும் ஒன்றாகவு இருக்குமாம். அதாவது Desktop, Laptop, Tablet PC போன்றவற்றுக்கும் பொருந்துவதோடு அதன் Desktop இல் Touch Screen முறைக்குப் பொருந்தும் வகையில் Keyboard ஒன்றும் கானப்படுமாம்.
Windows 7 ஐ விட வேகமாக் Boot ஆகும் என்பது இன்னொரு தகவல். அதேவேளை Facial Recognition எனும் புதிய நுட்பமும் இங்கு அறிமுகமாகிறது. அதாவது Password இற்குப் பதிலாக உங்கள் முகத்தை காட்டி உங்கள் User Account இற்கு Log ஆக முடியும். இதற்கு Web Cam இன் உதவி தேவைப்படுமாம். எப்ஸ்டோர் (Apstor) எனும் புது வசதியும் வாடிக்கையாளர்களுக்கு இத்தோடு வழங்க்கப்படும் என்பது இன்னொரு மேலதிக செய்தி. இந்த வசதி மூலம் தேவையான பொருத்தமான மென்பொருற்களுக்காய் அழைய வேண்டியதில்லை. ஒரே இடத்தில் இவற்றை பணம் செலுத்தி Download செய்துகொள்ள முடியும்.
இதைவிட இன்னும் சில பல புதிய தொழிநுட்பங்கள் அறிமுகமாகவுள்ளதாகவும் அது கூறுகின்றது. பொருத்திருந்து பார்ப்பது நமது வேளை அல்லவா…?

No comments:

Post a Comment

Pages