குலொஸர் புரோரமிங் (புதிய கணனி நிரலாக மொழி) - தமிழ் IT

Latest

Tuesday, August 16, 2011

குலொஸர் புரோரமிங் (புதிய கணனி நிரலாக மொழி)

புரோக்ரமிங் என்றதும் நமக்கு நினைவில் வருவது Java, C++ போன்ற Programming Language  கள் ஆகும்.  இவற்றுடன் அன்மையில் ஒரு புதிய அங்கத்தவர் இனைந்துள்ளர். அதுதான் குலோஸர்(Clojure) எனும் புதிய கணனி நிரலாக மொழியாகும். இது கடந்த மார்ச் மாதம் 11ஆந் தேதி பொது மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட்டது. (www.clojure.org) இந்த புதிய Programming Language  இப்போது அதிகமானோர் விரும்பிப் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக மாறி வருகிறது.

இவ் குலோஸர் (Clojure) மொழியை கணனி புரிந்துகொள்ளும் வகையில் அமைக்கும் வேளையைச் செய்வது ஜாவா வேச்சுவல் மெசின் (JCM) ஆகும். குலோஸர் (Clojure) மூலம் அனேகர் புரோக்ராம் எழுதுவதற்கு சில முக்கிய காரனங்கள் உள்ளன.

குலோஸர் (Clojure) உருவாக்கப்பட்டுள்ளது கணனி நிரலாக்க மொழியொன்றான லிப்ஸ் (Lips) இன் அடிப்படையைக் கொண்டாகும். லிப்ஸ் (Lips) என்பது 1985இல் ஜோன் மெகனி என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கணனி நிரலாக்க மொழியாகும். உலகின் முதலாவது உயர்தர நிரலாக்க மொழியான போட்ரன் (Fortran) இரண்டாம் கட்டமாக இதனைக் கூறலாம்.

லிப்ஸ் (Lips) ஆனது இன்றைய ஏராலமான நிரலாக்க மொழிகளுக்கு முன்னோடியாகும், பேர்ல் (Perl), பைதன் (Python), ரூபி (Ruby) மற்றும் ஜாவ ஸ்கிரிப்ட் (Java Script) என்பன இவற்றுள் பிரதானமனவையாகும்.

லிப்ஸ் (Lips) அடிப்படையாகக் கொண்டு குலோஸர் (Clojure) நிரலாக்க மொழியை நிறுவியவர் ரிச் ஹிகி என்பவராவார். இதில் இவர் முக்கியமாக இன்றைய நிரலாக்க மொழிகளில் Programmers பழக்கப்பட்டுள்ள முரையிலேயே இந்த லிப்ஸ் (Lips) ஐ குலோஸர்(Clojure) ஆக வடிவமைப்பதை முக்கியமாக சிந்தித்துள்ளார். இவ்வகையில் பார்த்தால் இது ஒரு நவீன ரீமிக்ஸ் ஆக கூற முடியும். அதேவேளை இதில் பழைய நிரலாக்க மொழிகளின் பண்புகளும் உள்ளன.

Rich Hickeyகுலோஸர் (Clojure) நிரலாக்க மொழியை உருவாக்குவதற்கு முன்னர் ரிச் ஹிகி டொட் லிப்ஸ் (Dot Lips) எனும் நிரலாக்க மொழி உருவாக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  இது லிப்ஸ் இனை அடிப்படையாகக் கொண்டு டொட் நெட் (.Net) ப்லெட்போம் இற்கு பொருந்தும் வகையில் ஆகும். இதன் போது நவீன நிரலாக்க மொழியொன்றிற்குப் பொருந்தும் வகையில் பழைய ஒரு நிரலக்க மொழியை மாற்றுவது பற்றிய ஆய்வின் முயற்சியாகவே இது மேற்கொள்ளப்பட்டது. அன்று முதல் கடந்த இரண்டரை ஆண்டுகளாக இவர் இந்த குலோஸர் (Clojure) ஐ அமைக்கிம் முயற்சியிலேயே ஈடுபட்டர். அமேரிக்கரான ரிச் ஹிகி 20 ஆண்டுகளாக கணனி நிரலாக்க அமைப்பள்ளராக பனியாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment

Pages