உங்கள் மனக்குறைகளை அரசாங்கத்திடம் கொட்டலாம்…

7-24-2014 2-16-44 PM மக்களின் பிரச்சினைகள அரசாங்கத்திற்கு அல்லது அரச நிறுவனமொன்றுக்கு நேரடியாக எத்திவைக்கும் முறையொன்றை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அரச சேவையை பெற்றக்கொள்வதில் ஏற்படும் சிக்கல்களை போக்குவதற்கும், அரச சேவைகளை உடனடியாகப் பெற்றுக்கொள்வதற்கும் வசதியாக இந்த புதிய இணையத்தளம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அலரி மாளிகையிலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அரச முகாமைத்துவ மற்றும் மறுசீரமைப்பு அமைச்சினால் இது முகாமை செய்யப்படுகிரது. மூன்று மொழிகளிலும் இந்த இனையத்தளத்தில் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.www.complaints.gov.lk என்ற இந்த புதிய இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் அல்லது 1919 என்ற தொலைபேசி இலக்கத்துடன் அரச தகவல் கேந்திர நிலையத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி தேவைகளை முன் வைக்க முடியும்.

நீங்கள் பதிவு செய்யும் முறைப்பாடு அனுப்பப்பட்டதன் பின் உங்களுக்கு ஒரு Reference Number வழங்கப்படும். பின்னர் குறித்த தேவைகளுக்கான பதில் குறுந்தகவல் ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாக சம்பந்தப்பட்ட நபருக்கு அனுப்பி வைக்கப்படும், தேவையெனில் ”நிலை பற்றி அறிந்துகொள்ள” என்ற இடத்தில் சென்று உங்கள் Reference Number ஐ வழங்கி உங்கல் முறைப்பாட்டின் தற்போதைய நிலை பற்றியும் அறிந்துகொள்ள முடியும்.

தமிழ் மொழியில் பல இடங்களில் பிழைகள் உள்ளன, என்றாலும் முயற்சி வரவேற்கத்தக்கது. முறைப்பாடுகள் முறையாக தீர்க்கப்படுமானால் மெச்சப்பட வேண்டிய சேவையே… பொருத்திருந்து பார்ப்போம்.

7-24-2014 2-15-38 PM

No comments

Powered by Blogger.