நவம்பர் 10 முதல் ஸ்கைப் சேவைகள் நிறுத்தம்…

skype ஸ்கைப் என்பது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தகவல் பரிமாற்ற பென்பொருளாகும். உள்ளூர், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே குரல்வழி மற்றும் வீடியோ தொலைதொடர்பை வழங்கி வந்தது ஸ்கைப் சேவை. இதனிடையே வரும் நவம்பர் 10ம் தேதி முதல் ஸ்கைப் தனது சேவையை நிறுத்தவுள்ளதாக பிரபல இந்திய செய்திச் சேவையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  இந்தியாவில் உள்ள உள்ளூர் அழைப்புகளுக்கு சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக மேலும் அதில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஏற்கெனவே வாட்ஸ் அப், வைபர் போன்ற உடனடி ஆப்ஸ்களால் தொலைதொடர்பு நிறுவனங்களின் வருவாய் குறைந்துள்ளது என அந்த நிறுவனங்கள் ட்ராயிடம் வலியுறுத்தி இருந்தன.இந்நிலையில் வரும் நவம்பர் 10ம் தேதி முதல் இந்தியாவில் உள்ளூர் அழைப்புகளை நிறுத்திக்கொள்ளப்போவதாக ஸ்கைப் அறிவித்துள்ளது. அதேசமயம் ஸ்கைப் டு ஸ்கைப் கால் வசதியை இந்தியாவிற்குள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் மற்ற செல்போன் அல்லது லேண்ட்லைன் நம்பரை தொடர்பு கொள்ள முடியாது என்றும் ஸ்கைப் அறிவித்துள்ளது.

இது இலங்கை ஸ்கைப் பாவனையாளர்களை எந்த அளவு பாதிக்கும் என்பது தொடர்பாக இதுவரை எதுவும் தெரியவில்லை, இருந்தாலும் இவாறான ஒரு நிலை ஏற்பட்டால் அதனால் வெளிநாடுகளில் இருக்கும் எமது சொந்தங்களுடனான தொடர்புகளில் பாரிய தாக்கங்கள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு எந்த மாற்றமும் வேண்டாம் என பிரார்திப்போம்…

No comments

Powered by Blogger.