பெயர் மாறும் நோக்கியா!

lumia-branding

முன்னனி மொபைல் விற்பனை நிறுவனங்களில் ஒன்றான நோக்கியாவை சமீபத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வாங்கியது. இந்த மாறுதல்களால் நோக்கியாவின் புதிய தயாரிப்புகள் விண்டோஸ் தொழில்நுட்பத்துடன் வெளியாகின. தற்போது நோக்கியா என்ற பெயர் முழுவதுமாக போன்களில் இருந்து நீக்கப்பட்டு மைக்ரோசாஃப்ட் லுமியா என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

நோக்கியா போன்களில் லுமியா போன்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அதனை பயன்படுத்தி கொள்ள நினைத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது புதிய பிராண்டை ''மைக்ரோசாஃப்ட் லுமியா'' என மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும் செல்போன் தயாரிப்புகளில் ஈடுபடாமல் மற்ற சேவைகளில் நோக்கியா தனி நிறுவனமாக செயல்படும் என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பெயர் மாற்றம் முதலில் பிரான்ஸில் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும், வரும் வாரத்திற்குள் மற்ற நாடுகளிலும் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளது. விண்டோஸ் ஆப்ஸ் ஸ்டோரில்கூட தற்போது லுமியா என்று பெயர் மாற்றம் செய்யப்ப்பட்டுள்ள்ளது.

அதனால் இந்தியாவில் ஆரம்பித்த நாள் முதல் இருந்து வந்த பிரபலாமான நோக்கியா பெயர் இனி நடைமுரையில் இருக்காது. பை பை நோக்கியா! வெல்கம் மைக்ரோசாஃப்ட் லுமியா என சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் பயன்பாட்டாளர்கள்.

No comments

Powered by Blogger.