Wi-Fi யை விட 100 மடங்கு வேகம் கொண்ட Li-Fi - தமிழ் IT

Latest

Wednesday, December 2, 2015

Wi-Fi யை விட 100 மடங்கு வேகம் கொண்ட Li-Fi

tocka-108563இணைய உலக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் லை-பை (Li-Fi) என்னும் புதிய சேவையை விங்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ் இனால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த Li-Fi தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு நொடிக்கு 224 gigabits வேகம் கொண்ட Li-Fi இதுவரை ஆய்வுக்கூடத்தில் மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுவந்தது. தற்போது இந்த தொழில்நுட்பம் முதன்முறையாக அலுவலகம் மற்றும் தொழிற்கூடங்களில் பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு நொடிக்கு 1 GB வேகத்தில் டேட்டா உபயோகிக்கும் அளவிற்கு முன்னேற்ற இயலும் என்று அறிவியலாள்ர்கள் தெரிவித்துள்ளனர். இது, சாதாரண Wi-Fi யின் வேகத்தை விட 100 மடங்கு அதிகம்.

முன்னதாக வை- பை இணைப்பை வழங்கக்கூடிய மின்குமிழ் ஒன்றை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாகவும், அதற்கு லை- பை எனப் பெயரிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. என்றாலும் லை-பை (Li-Fi) மின்குமிழ் தொழினுட்பத்தை கூட உண்மையிலேயே கண்டுபிடித்தவர் பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages