புதிய ஆய்வில் அஹமட்… - தமிழ் IT

Latest

Monday, October 12, 2015

புதிய ஆய்வில் அஹமட்…

12106910_544829329013022_3770454328685455746_n

உலக மக்களுக்கு மின்சாரத்தை இலவசமாக வழங்கும் பொருட்டு இன்றுவரையிலும் உலகம் எதிர்பார்த்திராத ஒரு பொருளில் இருந்து மின் சாரம் தயாரிப்பதர்கான ஆய்வு களில் இறங்கியுள்ளேன் முஸ்லிம் இளம் விஞ்ஞானி பேட்டி.

கடிகாரத்தை சுயமாக தயாரித்து பள்ளிக்கு எடுத்து வந்த முஸ்லிம் சிறுவனை வெடி குண்டை கொண்டு வந்திருப்பதாக கருதி அந்த சிறுவனின் கையில் விலங்கு மாட்டியது ஒரு அமெரிக்க கல்விகூடம்.

பிறகு அந்த தவறு சரி செய்ய பட்டது அமெரிக்க அதிபர் ஒபாமாவே அந்த சிறுவனை அழைத்து உபசரித்து உர்சாக படுத்தினார். அந்த சிறுவன் அஹ்மது தர்போது அவனது குடும்பத்தோடு சவுதி மன்னர் சல்மானின் விருந்தாளியாக மக்காவிர்கு உம்றா செய்ய வந்துள்ளான்.

சிறுவன் அஹ்மது சவுதி அரேபியாவில் ரியாத் நாளேடுக்கு பேட்டி கொடுக்கும் போது எதிர்காலத்தில் மின்சாரத்தை உலக மக்கள் இலவசமாக பயன் படுத்தும் பொருட்டு மிக மிக குறைந்த மதிப்புடைய பொருள்களில் இருந்து மின்சாரத்தை தயாரித்து உலக மக்களுக்கு வழங்குவதே எனது இலக்காகும் அதர்கான ஆய்வு பணிகளில் இப்போதே நான் இறங்கிவிட்டேன்.

எனது அந்த கண்டுபிடிப்பு வெற்றி பெற்று நடைமுறைக்கு வருகின்ற போது உலக மக்கள் மின்சாரத்தை எந்த கட்டணமும் இல்லாமல் பயன் படுத்தும் சூழல் உருவாகும் என்று சிறுவன் அஹ்மத் தனது பேட்டியில் தெரிவித்துள்ளான்.

இளம் விஞ்ஞானி தனது முயர்ச்சியில் வெற்றி பெற இறைவனிடம் நாமும் பிரார்திப்போம்

No comments:

Post a Comment

Pages