மீண்டு வந்த டொரண்ட் (Torrent) - தமிழ் IT

Latest

Wednesday, August 10, 2016

மீண்டு வந்த டொரண்ட் (Torrent)

02862953748359480இலவசங்களுக்கு பலக்கப்பட்ட எங்களுக்கு கடந்த சுமார் 13 ஆண்டுகளாக இந்த டொரண்ட் (Torrent) ஒரு வரப்பிரசாதமாக இருந்த்து என்று கூறலாம். இன்று நாம் 100, 150 ரூபாக்களுக்கு வாங்கக்கூடிய Software CD கள் எமது கைகளில் சர்வசாதரனமாக உலா வருவதற்கு இந்த டொரண்ட் (Torrent) தான் காரனம். இது சிலருக்கு தெரிந்திருந்தாலும் பலர் பலருக்கு தெரியாது.

பல்லாயிரக்கனக்கான ரூபக்கள் பெருமதியான மென்பொருட்கள், வீடியோக்கள், ஆடியோ ஆல்பம்கள் என ஏராலமானவைகளை எம்மைப்போன்றேவர்களுக்கு இலவசமாக தந்து வந்த்து இந்த டொரண்ட் (Torrent) தான். இதில் கடந்த மாதம் பிரபல டொரண்ட் (Torrent) தளமான “கிகாஸ் டொரண்ட்” தளம் முடக்கப்பட்டு அதன் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். புலமைச் சொத்து சட்டத்தின் கீழே இவர் கைது செய்யப்பட்டார். பலரை ஏங்கவைத்த இந்த செய்தி பெரும்பாலோருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.

இதனைத் தொடர்ந்து பல பிரபல டொரண்ட் (Torrent) தளங்கள் செயல் இழந்தன, இதில் Torrentz தளம் முக்கியமானது. இதனால் டொரண்ட் (Torrent) ஐ நம்பியிருந்த நம்மைப் போன்ற பலரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர்.

அனால் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் போல நேற்றிலிருந்து Torrentz தளம் மாற்று முகவரியொன்றில் இயங்க ஆரம்பித்துள்ளது ஓரளவு ஆறுதலைத் தருகிறது. அதே நேரம் கிகாஸ் டொரண்ட் தளமும் மாற்று முகவரியின்றில் இயங்க ஆரம்பித்துள்ளது. இது எமக்கு ஆறுதலைத் தந்தாலும் இந்த ஆறுதல் எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பது மட்டும் சொல்லமுடியாதது.

Torrentz தளத்தின் புதிய முகவரி : https://torrentz2.eu

KickassTorrents தளம் இன்னும் சரியானதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை, சரியான முகவரி உறுதிப்படுத்தப்பட்டால் பதிவிடுகிறேன்.

No comments:

Post a Comment

Pages