புது வரவு Samsung Galaxy Note 7 - தமிழ் IT

Latest

Wednesday, August 10, 2016

புது வரவு Samsung Galaxy Note 7

note7rumorசாம்சுங் நிறுவனம் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Samsung Galaxy Note 7 இனை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசி முதன் முதலாக சீனாவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

முன்னர் வெளியிட்ட தகவல்களின் படி இக் கைப்பேசியில் 4GB பிரதான நினைவகமே தரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அறிவித்தலுக்கு மாறாக 6GB பிரதான நினைவகத்தினை உள்ளடக்கியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சீனப் பெறுமதிப் படி 6088 யுவான் பெறுமதியுடையதாக காணப்படுவதுடன் அமெரிக்க டொலர் பெறுமதியில் தற்போதைய பணப் பரிமாற்ற வீதத்தில் 814 டொலர்கள் ஆகவும் இருக்கின்றது.

இதேவேளை இக் கைப்பேசி மொடலை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யும் எண்ணம் சாம்சுங் நிறுவனத்திற்கு இல்லை என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத் தகவல் உண்மை எனின் முன்னர் அறிவிக்கப்பட்டது போன்றே 4GB பிரதான நினைவகத்தினைக் கொண்ட குறித்த கைப்பேசியின் மொடலை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Samsung நிறுவனம் வெளியிட்ட  Galaxy Note 7 அறிமுக வீடியோ…

No comments:

Post a Comment

Pages